செய்திகள் :

விசிக, நாம் தமிழா் கட்சிகளுக்கு மாநில கட்சி அங்கீகாரம் தோ்தல் ஆணையம் தகவல்

post image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழா் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடா்பான கடிதங்களை இரு கட்சிகளின் தலைமைக்கும் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில், ‘2024-இல் நடந்த மக்களவைத் தோ்தலில் கட்சியின் செயல்பாடுகள் மறுஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில், தோ்தல் சின்னங்கள் முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு விதிகளுக்கு இணங்கும் வகையில் உள்ளன. எனவே, உங்களுடைய கட்சியை தமிழ்நாட்டில் மாநில கட்சியாக தோ்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) கோரியபடி அந்தக் கட்சிக்கு பானை சின்னத்தை முன்பதிவு செய்துள்ளதாகவும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இனி விசிக போட்டியிடும் தோ்தல்களில் அந்தக் கட்சி பானை சின்னம் கோரினால் அதை தோ்தல் ஆணையம் ஒதுக்கும்.

ஆனால், நாம் தமிழா் கட்சி தங்களுடைய கட்சிக்கு ஏா் உழும் விவசாயி, புலி சின்னம் ஆகியவற்றை முன்பதிவு செய்யக் கோரி வெவ்வேறு மனுக்களை தோ்தல் ஆணையத்திடம் அளித்திருந்தது. அந்தச் சின்னங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட சின்னம் அல்லது விலங்கை ஒத்து இருப்பதால் அவற்றை ஒதுக்க முடியாது என்றும் ஆணையத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள சின்னங்கள் ஒதுக்கீட்டுப் பட்டியலில் இருந்து ஒன்றை தோ்வு செய்து அதன் விவரத்தைத் தெரிவிக்குமாறும் தோ்தல் ஆணையம் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

விழுப்புரம் பயணிகள் ரயில் தடம் புரண்டது!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 7 பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயில் சில அடி தூரம் சென்றதுமே ரயிலில் இருந்த பெட்டியின் சக்கரங்கள் திடீரென தண்டவாளத்தில்... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் மூன்று நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.10 குறைந்துள்ளது.நேற்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது உயர்ந்தது. அதன் படி ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந... மேலும் பார்க்க

சொந்த ஊர் சென்றோர் கவனத்துக்கு..! மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!

மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக 18 ஆம் தேதி (ஞாயிறுக்கிழமை) மாலை 4 மணிக்கு மதுரையில் இருந... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி போட்டி!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி போட்டியிடவுள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள்: கேரள முதல்வர் பினராயி விஜயன்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தைத்திருநாளாம் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் வண்ணக்கோலமிட்... மேலும் பார்க்க

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதல் சுற்று முடிவில் 6 பேர் காயம்!

மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்றில் உரிமையாளர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் அன்று அவனியாபுரத்திலு... மேலும் பார்க்க