செய்திகள் :

விசிக-வா… காங்கிரஸா… எந்தச் சின்னத்தில் போட்டி? - காட்டுமன்னார்கோயில் வேட்பாளர் ஜோதிமணி விளக்கம்

post image

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த வி.சி.க தலைவர் திருமாவளவன், தற்போது போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.

அத்துடன், தனக்கு பதிலாக முன்னாள் எம்.பி இளையபெருமாளின் மகன் ஜோதிமணி போட்டியிடுவார் என்றும் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பை அடுத்து தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, ``விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து இதுவரை யாரும் என்னிடம் பேசவில்லை.

திருமாவளவன்

காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியில்தான் நான் விருப்ப மனுவை கொடுத்திருந்தேன். ஆனால் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியில் காட்டுமன்னார்கோயில் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை. அதேசமயம் இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சியான வி.சி.க-வுக்கு ஒதுக்கியிருந்தார்கள்.

இந்த சூழலில்தான் வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்கள் என்னை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். அவரின் அந்த அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. தலைவர் திருமாவளவனின் அறிவுரைப்படி என்னுடைய அடுத்தகட்ட செயல்பாடுகள் இருக்கும்.

நான் தற்போது காங்கிரஸ் கட்சியில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என்னை எப்படி வேட்பாளராக அறிவித்தார்கள் என்று தெரியவில்லை.  

காங்கிரஸும், வி.சி.க-வும் தி.மு.க கூட்டணியில்தான் அங்கம் வகிக்கின்றன. அதனடிப்படையில் எனக்கு தொகுதியை விட்டுத்தருமாறு, வி.சி.க தலைவரிடம் எங்கள் காங்கிரஸ் தலைமை கேட்டிருக்கலாம்.

காட்டுமன்னார்கோயில்

அல்லது தலைவர்களாக எடுத்த முடிவின்படி எனக்கு இந்த சீட் கிடைத்திருக்கலாம். அதேபோல, நான் எந்த சின்னத்தில், எப்படி போட்டியிடுவேன் என்பது குறித்து இதுவரை எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

வி.சி.க-வின் சின்னத்தில் போட்டியிட சொல்வாரா அல்லது காங்கிரஸின் சின்னத்தில் போட்டியிட சொல்வாரா என்று தெரியவில்லை. காங்கிரஸ் தலைவரும், விசிக தலைவரும் ஒன்றாக சேர்ந்து என்ன சொல்கிறார்களோ அதன்படி செயல்படுவேன்" என்றார்.

விதிமுறையை மீறிய வாகனங்களுக்கு பல லட்சம் அபராதம் - புதுச்சேரி போக்குவரத்து போலீசார் அதிரடி!

அதிவேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கும் எஸ்.பி. ரட்சனா சிங்எஸ்பி தலைமையில் வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பும் ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டனஅகற்றப்பட்ட ஏர் ஹாரன்களை பார்வையிட்ட எஸ்பி அனுமதிக்கப்பட்ட அளவை விட... மேலும் பார்க்க

'டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு'- தொகுதி மறுவரையறை தோல்வி குறித்து ஸ்டாலின்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

ஓட்டு கேட்க கிளம்பிய நடிகை, கேட்டை திறக்காத தலைவர்; கட்சியில் சேர்ந்ததும் நடிகருக்குக் கிடைத்த கார்

வரும் வியாழக்கிழமை நடக்கவிருக்கிறது தமிழக சட்டசபைத் தேர்தல். ஆளும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபக்கமும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பக்கமும்... மேலும் பார்க்க

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்! - Drone Clicks

கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத்துக்கடவு வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கிணத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு; தோல்வியைத் தழுவிய தொகுதி மறுவரையறை மசோதா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதாவது, * பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் அமைப... மேலும் பார்க்க

"தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது, நான் கையெழுத்திட்டு தருகிறேன்"- அமித் ஷா வாக்குறுதி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும், தொகுதி மறு சீரமைப்பு குறித்தும் கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற விவாதத்... மேலும் பார்க்க