செய்திகள் :

"விஜய்க்குச் சரியான வழிகாட்டுதல் இல்லை" - தாடி பாலாஜி ஓப்பன் டாக்

post image

கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி.செல்வகுமார் ஏற்பாட்டில் நடிகர் தாடி பாலாஜி கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் தளவாய் சுந்தரத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாடி பாலாஜி கூறுகையில், "கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரத்தை ஆதரித்து பிரசாரம் செய்துவருகிறேன். தளவாய் சுந்தரத்துக்கு ரொம்ப நல்ல வரவேற்பு இருக்கு. அவர் நிறைய நல்ல விஷயங்களைப் பண்ணிருக்கிறார்.

நல்ல விஷயம் செய்தவர்கள் மீண்டும் வரணும்னு மக்கள் நினைக்கிறாங்க. விஜய்யும் த.வெ.க கட்சி மூலமாக அரசியலில் முயற்சி பண்ணுகிறார். தனக்கு கூடுகின்ற மக்கள் கூட்டம் ஓட்டாக மாறணும்னுதான் விஜய் நினைக்கிறார். அவர்தான் பார்த்துப் பார்த்து வேட்பாளர்களைப் போட்டிருக்கிறார்.

அ.தி.மு.க வேட்பாளர் தளவாய் சுந்தரத்துக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட தாடி பாலாஜி
அ.தி.மு.க வேட்பாளர் தளவாய் சுந்தரத்துக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட தாடி பாலாஜி

இந்தத் தேர்தலைப் பாத்தீங்கன்னா ஒவ்வொருவரும் பேசும்போது ஒன்னொன்னு ஓட்டுறாங்க. அதைத் தாண்டி வித்தியாசமா நான் இருப்பேன்னு சொல்லிட்டு விஜய் சைக்கிள் ஓட்டுகிறார். ஆனா அவருடைய ஸ்டைல் வேற மாதிரி இருக்கும்.

எனக்குத் தெரிஞ்சு அவர் ஒரு இடத்தை நோக்கி ஓடுகிறார். அதுல அவர் சக்சஸ் ஆகலாம், இல்ல அதில் அவர் ஒரு பாடம் கத்துக்கலாம். இப்ப விஜய் தொடர்ந்து ஒர்க் பண்ணிட்டுதான் இருக்கிறார். அதிலிருந்து அவரால் பின்னோக்கி வர முடியாது.

என்னதான் நடக்குதுன்னு பாப்போம்னு ஒரு சேலஞ்சா கூட அவர் எடுத்துருக்கலாம். தேர்தலுக்குப் பிறகு பாடம் கற்றுக்கொண்டு திரும்ப வரலாம். என்னதான் நடக்கிறது என்று பாப்போம்.

நடிகர் தாடி பாலாஜி பிரசாரம்
நடிகர் தாடி பாலாஜி பிரசாரம்

விஜய் ஒரு இடத்துல போராடுறாரு, நாங்க ஒரு இடத்துல போராடுறோம். அனைவரும் எப்படியாவது ஜெயிச்சிடணும்னு வெயிட் பண்றாங்க. விஜய் தேர்தல் அறிக்கையில் ஒரு பவுன் தங்கம், இலவச எரிவாயு சிலிண்டர்னு நிறைய சொல்லிருக்காரு. இதெல்லாம் மக்கள் எப்படி ஏற்றுக்கொள்ளுவாங்க?

மக்களை கவரணும்னா யாரு வேணும்னாலும் எது வேணும்னாலும் கொடுக்கலாம். உலகத்திலேயே இல்லாத திட்டங்கள் எல்லாம் வாக்குறுதியா கொடுக்கலாம். செயல்படுத்துறதுதான் முக்கியம். சரியான வழிகாட்டுதல் இருந்தால் விஜயாலும் சாதிக்க முடியும். அவருக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்பதுதான் எங்க வருத்தம்" என்றார்.

"மனைவிக்குக் கொடுத்த வாக்கு; இனி அந்தப் பாதையில்தான்" - பிரசாரத்துக்குச் செல்லாத தமிழருவி மணியன்

காமராஜர் மக்கள் கட்சியை தமிழ் மாநில காங்கிரஸுடன் இணைத்த பிறகு தமிழருவி மணியனின் பேச்சை எங்கும் கேட்க முடியவில்லை.தமிழருவி மணியன் காந்தி, காமராஜரால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர். இருந்தாலு... மேலும் பார்க்க

அமெரிக்கா - ஈரான்: "ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவோம்" - ஈரான் எச்சரிக்கையின் பின்னணி என்ன?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ள அதே வேளையில், ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.அ... மேலும் பார்க்க

ஜூ.வி மெகா சர்வே: `பி.டி.ஆர் vs சுந்தர்.சி' போட்டி களம்! - சிவகங்கை, மதுரை, தேனி மாவட்டம் யாருக்கு?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளில... மேலும் பார்க்க

ஜூ.வி மெகா சர்வே: `இழுபறியில் நயினார் நாகேந்திரன்?' - விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி நிலவரம்!

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளில... மேலும் பார்க்க