`6 அமைச்சர் பதவி; 10 வாரியப் பொறுப்பு; ஆசைகாட்டிய தவெக... அதிமுக-வுக்கு துரோகம்!...
விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏக்கள் யார் யார் தெரியுமா? - சட்டமன்றத்தில் பிளவுப்பட்ட அதிமுக!
முதல்வர் விஜய்யின் தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்டிருந்தது. அதில், தவெக அரசுக்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏக்களும் எதிராக 22 எம்.எல்.ஏக்களும் நடுநிலையாக 5 எம்.எல்.ஏக்களும் வாக்களித்திருக்கின்றனர்.

தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை அவையில் முதல்வர் விஜய் முன்வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுக உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்கிறோம் என அறிவித்தார். மதிமுக எம்.எல்.ஏக்கள் இருவரும் அவைக்கு வரவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக, ஐ.யூ.எம்.எல், அமமுக சார்பில் வென்ற காமராஜ் ஆகியோர் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதிமுக இடையேதான் சட்டமன்றத்துக்குள் ஒரு களேபரமே நடந்தது.
அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கிறோம் எனக் கூறி அமர்ந்த நிலையில், எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் சி.வி.சண்முகம் அணி சார்பில் எஸ்.பி.வேலுமணிக்கு பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரும் வேலுமணியை பேசவிடக்கூடாதென கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேலுமணி ஆட்சிக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களிப்போம் என அமளிக்கு மத்தியில் அறிவித்தார்.






திமுக, தேமுதிக, மஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்ய, அவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பின் முடிவில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏக்களும் எதிராக 22 எம்.எல்.ஏக்களும் நடுநிலை என 5 எம்.எல்.ஏக்களும் வாக்களித்திருந்தனர்.
அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் அணியில் 25 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
ஆதரவு எம்.எல்.ஏக்கள்:
வேலுமணி
கோ.ஹரி
சி.விஜயபாஸ்கர்
கே.பி.அன்பழகன்
இசக்கி சுப்பையா
ஆர்.காமராஜ்
சத்யபாமா
மரகரம் குமரவேல்
மரகதம் வெற்றிவேல்
லீமா ரோஸ்
எஸ்.எம்.சுகுமார்
எஸ்.சேகர்
திலீபன் ஜெய்சங்கர்
என்.எஸ்.என் நடராஜ்
நத்தம் விஸ்வநாதன்
க.மோகன்
கோ.ரவி
இரா.ராகேஷ்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கே.சி வீரமணி
ஜெயக்குமார்
ஹரிபாஸ்கர்
அருண்மொழித்தேவன்
சி.வி.சண்முகம்
ப.பாலகிருஷ்ண ரெட்டி
அதிமுக சார்பில் எடப்பாடி அணியில் 22 எம்.எல்.ஏக்கள் ஆட்சிக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
எதிர்த்து வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்!
ராமச்சந்திரன்
உஷா ராணி
ஜெயசுதா லெட்சுமி
வெ.சம்பத் குமார்
தளவாய் சுந்தரம்
நல்லதம்பி
மணி
முக்கூர் சுப்பிரமணியன்
ஏ.ராஜசேகர்
சு.ராஜேந்திரன்
கோ.வெங்கடாசலம்
வெற்றிவேல்
வேலழகன்
ச.வேலு
ஏ.பி.ஜெயசங்கரன்
எடப்பாடி பழனிசாமி
ஓ.எஸ்.மணியன்
அக்ரி கிருஷ்ணமூர்த்தி
இராஜேந்திரன்
கே.சி.கருப்பண்ணன்
கோவிந்தராஜன்
சு.பழனிசாமி















