``அங்க என்ன பண்ற.. சீக்கிரம் சேப்பாக்கத்துக்கு ஓடி வா!" - அஸ்வின் போட்ட போஸ்ட்! ...
`விஜய் அண்ணா சொன்னதை செய்வார்; இனி எல்லாம் நல்லதாகவே...'- பதவியேற்பு விழாவுக்கு ஓடி வந்த நடிகர் ஜெய்
சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாகத் தவெக-வை மக்கள் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். பல போராட்டங்களைத் தாண்டி இன்று காலை முதல்வராகப் பதவியும் ஏற்றிருக்கிறார் விஜய்.
விஜய்யுடன் நெருக்கமாக சினிமாவில் பல காலம் பயணித்த அவருடைய நண்பர்கள் பலரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.
அந்த வகையில், நடிகர் ஜெய்யும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துக் கொண்டார். நேரு உள்விளையாட்டு அரங்கம் இருக்கும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டதால், உடனடியாக காரிலிருந்து இறங்கி நிகழ்விற்கு ஓடி வந்திருக்கிறார்.
விஜய் பதவியேற்றப் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஜெய், "விஜய் அண்ணா தனது நன்றிக்கடனைச் செலுத்துவதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறார்.
இன்று நான் திரையுலகில் இந்த நிலையில் இருப்பதற்கு விஜய் அண்ணன் தான் மிக முக்கிய காரணம். அவர் எனக்கு வழங்கிய அந்த முதல் வாய்ப்பினால் தான் இன்று நான் சினிமாவில் இருக்கிறேன். அந்த நன்றிக்கடனைத் தான் நானும் இப்போது செலுத்திக்கொண்டிருக்கிறேன்.
இந்த வெற்றியை நான் முன்பே எதிர்பார்த்தேன். இந்த வெற்றி குறித்த பெரும் நம்பிக்கை எனக்குள் முன்பே இருந்தது. மக்களின் எதிர்பார்ப்பு எப்படியிருக்குமோ, அதற்கு ஏற்றாற்போல் இந்த ஆட்சி அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும். அனைவரும் நம்பிக்கையோடு இருங்கள். விஜய் அண்ணா எப்போதுமே சொன்னதைச் செய்வார்.
எனவே, அவர் அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் நிச்சயம் நிறைவேற்றுவார். தமிழ்நாடு இனி நல்ல பாதையில் செல்லும், வெற்றி நிச்சயம்



















