செய்திகள் :

"விஜய் அவ்வளவாக எதையும் பார்த்துப் படிக்க மாட்டார்; அவருக்கு நான்-வெஜ் பிடிக்கும்" - ஷோபா ஷேரிங்ஸ்

post image

தமிழக முதலமைச்சர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகருக்கு 'பெஸ்ட் மாம்' விருதை வழங்கினார் ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன், பத்திரிகையாளர் ரபி பெர்னார்ட்.

விருது பெற்ற பின், ``விஜய்க்கு நான்-வெஜ் ரொம்பப் பிடிக்கும். மட்டன், பிரான் எல்லாம் நல்லா சாப்பிடுவாரு. தோசைதான் அவரோட ஃபேவரைட். இப்பவும் அவர் வீட்டுக்குப் போனா, `என்ன தோசை வேணும்?’னு கேட்டு வெரைட்டியா ஊத்திக் குடுப்பாரு.

ஷோபா சந்திரசேகர் விருது
ஷோபா சந்திரசேகர் விருது

1984-ல் `வெற்றி’ என்ற படத்தின்போது எடுத்த படம் இது. அதில், 'அப்பா கார் வந்துருக்குப்பா' என்று முதல் வசனத்தைப் பேசினார். கே.கே.சுந்தர் சார்தான் விஜய்யின் அப்பாவாக நடித்திருந்தார். விஜய்யின் தங்கை அந்த முதல் வசனத்தைப் பேசி, கிண்டலடித்துக்கொண்டேயிருப்பார்.

நாளைய தீர்ப்பில் முதல் நாளில் ராதா ரவி சாருடன் ஒரு கடினமான காட்சியை எஸ்.ஏ.சி கொடுத்தார். ஆனால், விஜய் ஒரே டேக்கில் ஓ.கே செய்துவிட்டார். எஸ்.ஏ.சி வீட்டுக்கு வந்து 'அவன்கிட்ட ஒரு ஸ்பார்க் இருக்கு’ன்னு சொன்னாரு. அவரு அவ்வளவு ஈஸியா எதையும் பாராட்ட மாட்டார்.

பதவியேற்பு விழாவில் விஜய் பார்க்காமல் உறுதிமொழி எடுத்ததுதான் ஆச்சர்யமாக இருந்தது. அவர் அவ்வளவாக எதையும் பார்த்துப் படிக்க மாட்டார். காட்சிகளில் வசனங்களை உள்வாங்கி, புரிந்துகொள்ளும் பழக்கம் அவருக்கு உண்டு. விஜய் பதவியேற்கும்போது என்னுடைய கணவரின் முகத்தைத்தான் பார்த்துக்கொண்டே இருந்தேன்" எனப் பகிர்ந்து கொண்டார்.

Vikatan - Aval Awards Sponsors
Vikatan - Aval Awards Sponsors

`பிள்ளைக்காக தன் அடையாளத்தையே தள்ளிவைத்தவர்..!'- ஷோபா சந்திரசேகருக்கு விருது வழங்கிய விகடன் MD

தமிழக முதலமைச்சர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகருக்கு 'பெஸ்ட் மாம்' விருதை வழங்கியது அவள் விருதுகள். இந்த விருதை ஷோபா சந்திரசேகருக்கு வழங்கியவர், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா. சீனிவாசன... மேலும் பார்க்க

Aval Awards: ``அந்தக்காலத்து ஏ.ஐ சித்ரா; அவ்ளோ Perfect-ஆ பாடுவாங்க!’’ - ஶ்ரீனிவாஸ்

'கலைநாயகி' விருது பெற்ற கே.எஸ்.சித்ரா குறித்து, பாடகர் ஸ்ரீனிவாஸ் பேசும்போது, ``பள்ளி, கல்லூரி காலத்தில் நாங்கள் ஓரளவுக்கு பாடுவோம். ஆனால், சித்ரா அப்போதே வேறு கிரகத்திலிருந்து வந்ததைப்போல பாடுவார். இ... மேலும் பார்க்க

Aval Awards "பக்தி ஆல்பத்துக்காக 1008 அம்மன் பெயர்களை உச்சரித்து.!"- சித்ரா குறித்து ஸ்ரீகாந்த் தேவா

பாடகி சித்ராவிற்கு 'கலைநாயகி' விருதை வழங்கினார்கள் கங்கை அமரன், ஸ்ரீகாந்த் தேவா, பாடகர் ஸ்ரீனிவாஸ், இயக்குநர் விக்ரமன் ஆகியோர். இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசும்போது, ``ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து இ... மேலும் பார்க்க

"அரசியலமைப்பு எனக்குச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்..!" - அருணா ராய் | Aval Awards

'அவள் ஆளுமை' விருதை அருணா ராய்-க்கு ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அஷோக் வர்தன் ஷெட்டி வழங்கி சிறப்பித்தார்.`அவள் ஆளுமை’ விருதைப் பெற்றுக்கொண்ட அருணா ராய் நிறுத்தி, நிதானமாகப் பேசினார்... ``இன்று ஒரு மி... மேலும் பார்க்க

Aval Awards: 'பெண்ணென்று கொட்டு முரசே!’ - அருணா ராய் முதல் நிமிஷா வரை; இன்று அவள் விருதுகள் | Live Blog

யாருக்கு என்ன விருதுகள்?இந்த ஆண்டு...பெண்கள் மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு போன்ற உரிமைகளுக்காக 80 வயதைக் கடந்தும் களமாடி வரும் அருணா ராயின் கைகளைச் சென்றடைகிறது ‘அவள் ஆளுமை’ விருது.யதார்த்த நடிப்பால் நம... மேலும் பார்க்க