முதியவரிடம் ரூ.3 கோடி மோசடி; மகளிர் சுய உதவிக்குழு தலைவியின் மாஸ்டர் பிளான்; சிக...
விஜய் : "எனக்கு இது One Last Chance" - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்
விஜய் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது.
அ.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இசை வெளியீட்டு விழா நாளை ( டிச.27) மலேசியாவில் நடைபெற இருக்கிறது.
'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'தளபதி திருவிழா' என விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து மியூசிக் கான்சர்ட்டும் நடைபெற இருக்கிறது.
விஜய்க்கு ஹிட் பாடல்களைத் தந்த பல பாடகர்களும் இந்த மியூசிக் கான்சர்ட்டில் பங்கேற்று பாடவுள்ளனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (டிச. 26) செய்தியாளர்களைச் சந்தித்தது பேசிய அனிருத், " 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா நாளைக்கு மலேசியாவில நடக்குது.

ரொம்ப ஆர்வமா இருக்கேன். கிட்டதட்ட 80,000 பேர் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிறாங்க. பர்பாமன்ஸ் பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்.
இது விஜய் சாரோட எனக்கு 'One Last Chance'. எங்க காம்பினேஷன்ல வந்த எல்லாப் பாட்டும் ஹிட் தான்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

















