செய்திகள் :

விபத்து ஏற்படுத்தி 3 உயிர்களைக் காவு வாங்கிய சுஹைல்; சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டதால் சர்ச்சை

post image

கேரள மாநிலம் ​கொச்சி நெடும்பாசேரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த ‘மினி கூப்பர்’ சொகுசு கார் மோதியதில் வயநாடு கல்பற்றாவைச் சேர்ந்த தேவிகா (21), பாலக்காடு மன்னார்க்காட்டைச் சேர்ந்த கோபிகா (22) மற்றும் கர்நாடகாவின் கூர்க் பகுதியைச் சேர்ந்த இய்யாஸ் (21) ஆகிய மூன்று கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபரின் மகன் சுஹைல் சஜீவை(19) பொதுமக்கள் மடக்கிப் பிடித்தபோது, "எல்லாவற்றையும் என் அப்பா பார்த்துக்கொள்வார்" என்று அவர் அதிகாரத் தோரணையில் திமிராகப் பேசியது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கைதான சுஹைல் சஜீவ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இளம் குற்றவாளிகளுக்கான சீர்திருத்தப் பள்ளிக்கு (போர்ஸ்டல் பள்ளிக்கு) அனுப்பப்பட்டார். அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது குறித்து முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படாததும் பெரும் சர்ச்சையையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரைச் சாதாரண சிறையில் அடைக்காமல் போர்ஸ்டல் பள்ளிக்கு அனுப்பியதும், எஃப்.ஐ.ஆரில் மதுபோதை தொடர்பான பிரிவுகள் உடனடியாகச் சேர்க்கப்படாததும் வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி என உயிரிழந்த மாணவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அரசுத் தரப்பிலும் காவல்துறையிலும் தலையீடுகள் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ​இச்சம்பவம் குறித்து எழுந்த அனைத்து சந்தேகங்கள் குறித்தும் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ​"நெடும்பாசேரியில் நடந்தது மிகவும் வேதனையான சம்பவம்; ஒட்டுமொத்த கேரளாவையும் உலுக்கிய ஒரு நிகழ்வு. எந்தத் தவறும் அறியாமல் சாலையில் சென்றுகொண்டிருந்த மூன்று பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். அந்தக் குடும்பங்களின் வேதனையை நாம் அனைவராலும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

மரணமடைந்த மாணவிகள் மற்றும் மற்றும் மானாவர்
மரணமடைந்த மாணவிகள் மற்றும் மற்றும் மானாவர்

அந்தக் குற்றவாளியை யாராவது காப்பாற்ற முயன்றால் அது ஒருபோதும் நடக்காது. சட்டத்தின் கீழ் என்னென்ன தண்டனைகள் கொடுக்க முடியுமோ, அவை அத்தனையையும் கண்டிப்பாகப் பெற்றுத் தருவோம். ​அவரை ஏன் போர்ஸ்டல் பள்ளிக்கு அனுப்பினார்கள் என்ற குழப்பமும் சந்தேகமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

அவரை அங்கு அனுப்பியது காவல்துறை அல்ல, நீதிமன்றம்தான் அவரை அங்கு அனுப்பியது. 21 வயதுக்குட்பட்டவர்கள் குற்றவாளிகளாக வரும்போது, அவர்களை எங்கு அனுப்ப வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது நீதிமன்றம்தான். காவல்துறை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதும் நீதிமன்றம் ரிமாண்ட் செய்தது.

21 வயதுக்குக் குறைவானவர்களை போர்ஸ்டல் பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும் என்பது சிறை விதிமுறை. அதனால்தான் நீதிமன்றம் அங்கு அனுப்பியது. ​அப்படி அனுப்பப்பட்டதால் அவர் இந்த வழக்கிலிருந்து தப்பித்துவிட்டார் என அர்த்தமல்ல. சட்டம் வகுத்துள்ள அனைத்துத் தண்டனைகளையும் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளில்தான் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை; நிச்சயமாக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும். யாரோ சிலர் தேவையில்லாத விஷயங்களைப் பேசி அவர்களைத் தவறாக வழிநடத்தப் பார்க்கிறார்கள்.

மினி கூப்பர் காரில் சுஹைல் சஜீவ்
மினி கூப்பர் காரில் சுஹைல் சஜீவ்

உள்துறை அமைச்சர் என்ற முறையில் எந்தச் சந்தேகத்திற்கும் இடமின்றி திட்டவட்டமாக ஒன்றைச் சொல்கிறேன்: இந்தக் குற்றவாளிக்குச் சட்டப்படி கிடைக்கக்கூடிய அதிகபட்ச கடுமையான தண்டனையைப் பெற்றுத் தருவதில் காவல் துறையும், அரசும், அரசுத் தரப்பு வழக்கறிஞர்களும் உறுதியாக நிற்பார்கள்.

சட்டத்தின் எந்தவொரு ஓட்டையையும் பயன்படுத்த இடம் கொடுக்க மாட்டோம். ​மேலும், அவர் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று பேசப்படுகிறது. எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தால் என்ன? இதில் எந்த அமைச்சரும் தலையிடப் போவதில்லை. அவர் எனது தொகுதிக்குட்பட்டவர் அல்ல. வீணாகப் பரப்பப்படும் வதந்தி இது.

ரமேஷ் சென்னிதலா
ரமேஷ் சென்னிதலா

ஒருவர் வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்திய உடனேயே, அவர் மது அருந்தியிருந்தார் என்று நாமாகத் தன்னிச்சையாக முடிவெடுத்து விட முடியாது. மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ மருத்துவச் சான்றிதழ் கிடைத்த பிறகே மது அருந்தியதற்கான சட்டப்பிரிவுகளைச் சேர்க்க முடியும்.

சட்டம் கூறும் நடைமுறைகளின்படிதான் இவை அனைத்தும் நடக்கும். ​பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இந்தச் சட்ட நடைமுறைகள் தெரியாமல் இருக்கலாம், அதற்காக நான் அவர்களைக் குறை கூற மாட்டேன். அத்தனை பெரிய இழப்பையும் வேதனையையும் சுமந்து நிற்கும் ஒரு குடும்பத்திற்கு அச்சமும் சந்தேகமும் ஏற்படுவது இயல்பானதுதான்.

அவர்களின் கவலையை அரசும் காவல் துறையும் முழுமையாகப் புரிந்து கொள்கிறது. இந்தக் குற்றவாளிக்குச் சட்டப்படி கிடைக்கக்கூடிய மிகக் கடுமையான தண்டனை நிச்சயமாகக் கிடைக்கும் என்று நான் அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்" ​என்றார்

திருப்பூர்: ஆடு மேய்க்கச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை, கொலை - பைக் மெக்கானிக் சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம் நம்பியூர் லாகம்பாளையம் பகுதியில் கணவருடன் வாழ்ந்து வந்தவர் 39 வயதான ஜானகி‌. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் நடராஜ் உயிரிழந்த காரணத்தால், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகில் உள்ள சேவ... மேலும் பார்க்க

குமரி: காதல் தொல்லையால் பெண் எடுத்த விபரீத முடிவு; இளைஞரை அடித்துக்கொன்ற உறவினர்கள்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெரியவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஞானசெல்வன் (58). முன்னாள் ராணுவ வீரர். தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரதுமகள் ஏஞ்சல்(26) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஏஞ்சலை, அ... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி வழக்கு: ஐ.பி.எஸ் அதிகாரிகள் அருண், கண்ணனிடம் விசாரணை - அடுத்து யார்?

சிறுமிகளிடம் தவறாக நடந்த குற்றச்சாட்டில் பிரபல தொழிலதிபரான ஜெம் வீரமணி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் வீரமணியின் தோழி ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ரூ.5 கோடி லஞ்ச விவகாரம் - சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

தஞ்சாவூர் நீலகிரி ஊராட்சியின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் வள்ளியம்மை. இவரது கணவர் ஆர்.எம்.பாஸ்கரன் அதிமுக பிரமுகர். இவரது அண்ணன் மகன் சரவணன். பிரபல மூளை நரம்பியல் டாக்டர் இராமசாமி இவரது மனைவி ஜெயஸ்ர... மேலும் பார்க்க

சேலம்: மங்கி குல்லா கும்பலின் வெள்ளி குடோன் ஸ்கெட்ச் - ₹15 கோடி மதிப்புள்ள 600 கிலோ வெள்ளி திருட்டு!

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி அருகில் உள்ள சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். வெள்ளி வணிகம் செய்து வந்த இவர், வெள்ளிக் கட்டிகளில் இருந்து பொருள்களை உற்பத்தி செய்யும் வெள்ளி பட்டறையை... மேலும் பார்க்க

தருமபுரி : களவுக்குப் போன கல்லூரி மாணவிகள் - உறவினர்களுடன் கைதான அதிர்ச்சி சம்பவம்!

ஆடம்பரமாக வாழ தவறான வழிகாட்டுதலால் திருடுவதை ஜாலியாக செய்து வந்த கல்லூரி மாணவிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதுசமகாலத்தில் பல்வேறு து... மேலும் பார்க்க