விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச்செல்ல அனுமதி- இந்த ரூல்ஸ் தெரியுமா?
சர்வதேச விமானங்களை போன்று உள்நாட்டு விமானங்களுக்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. பலரும் இந்தியாவுக்குள்ளே பயணிக்க விமானத்தையே தேர்வு செய்கின்றனர்.
உள்நாட்டு விமானங்களில் பயணிக்கவும் பல்வேறு விதிகள் பின்பற்றப்படுகிறது. இந்த பதிவில் உள்நாட்டு விமானங்களில் எவ்வளவு மதுபானம் கொண்டு செல்வது தொடர்பான விதிகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்துக்கான ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அமைத்த வழிகாட்டுதல்களின்படி, உள்நாட்டு விமானங்களில் பயணிகள் குறைந்த அளவு மதுவை மட்டுமே எடுத்துச் செல்ல விதிகளுடன் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆல்கஹால் உள்ளடக்கம் 70% ஐ விட அதிகமாக இல்லை எனில், பயணிகள் 5 லிட்டர் வரை மதுபானங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
விமானங்களில் பயணிகள் தங்கள் சொந்த மதுவை உட்கொள்ள முடியாது என்பதால், கைப் பைகளில் மதுவை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க டிஜிசிஏ அறிவுறுத்துகிறது.
ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன. மதுபானங்களை எடுத்துச் செல்ல மறுக்கும் உரிமை விமான நிறுவனத்திற்கு உள்ளது என்பதையும் பயணிகள் அறிந்திருக்க வேண்டும்.
ஏர் இந்தியா கேபின் மதுவை முற்றிலுமாகத் தடைசெய்தாலும் ஸ்பைஸ் ஜெட், விஸ்தாரா போன்ற விமான நிறுவனங்கள், பயணிகள் பரிசோதனைக்குப் பிறகு சரியான அளவில் இருந்தால் அதை அனுமதிக்கின்றன.
சில விமானங்களின் விதிகள் மாற்றத்திற்கு உட்பட்டிருக்கலாம் என்பதால், பயணிகள் தங்கள் விமானத்திற்கு முன் சமீபத்திய DGCA விதிமுறைகள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது.