செய்திகள் :

திருவள்ளூர் தொகுதி: தி.மு.க-வில் `சீட்'க்கு கடும் போட்டி! - குஷியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்

post image

திருவள்ளூர் தொகுதியில் ஏழு தடவை தி.மு.கவும், 5 தடவை அ.தி.மு.கவும், இரண்டு தடவை காங்கிரஸும், ஒரு தடவை தமிழ் மாநில காங்கிரஸ், விவசாயிகள் மஸ்தூர் மக்கள் கட்சி ஆகியவை வெற்றி பெற்றியிருக்கின்றன.

கடந்த 2021-ல் நடந்த தேர்தலில் தி.மு.கவைச் சேர்ந்த வி.ஜி.ராஜேந்திரன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க திருவள்ளூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா வெற்றி வாய்ப்பை இழந்தார். சென்னையில் குடியிருப்பதால் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் தொகுதியை சரிவர கண்டுக்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதைப் போல கட்சி கூட்டங்களுக்கும் அரசு நிகழ்ச்சிகளுக்கும் சரியான நேரத்தில் அவர் வருவதில்லை.

ராஜேந்திரன்

குறிப்பாக திருவள்ளூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விழாவுக்கு வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ காலதாமதமாக வந்ததால் தூய்மை பணியாளர் ஒருவர் மயக்கமடைந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் வி.ஜி.ராஜேந்திரனின் பி.ஏ-வாக இருந்த தி.மு.க பிரமுகர் நேதாஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் அறிவாலயத்துக்குச் சென்றதால் அவரை கட்சியிலிருந்து தலைமை நீக்கியது. நேதாஜி விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஒன் டு ஒன் நட்பிலிருந்த வி.ஜி. ராஜேந்திரன் மீதே வருத்தத்தை கட்சித் தலைமைக்கு ஏற்பட்டது. அதோடு சிட்டிங் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் டீமுக்கும் திருவள்ளூர் தொகுதி நிர்வாகிகளுக்கும் இடையே முட்டல் மோதல் இருந்து வருகிறது. அதனால் திருவள்ளூர் தொகுதியில் கடும் கோஷ்டி பூசல் நிலவி வருகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவள்ளூர் மாவட்ட தி.மு.கவினர், ``திருவள்ளூர், திருத்தணி தொகுதிகளின் மாவட்ட செயலாளராக இருப்பவர் சந்திரன். ஆனால், ஆக்டிங் மாவட்டச் செயலாளர் போல சிட்டிங் எம்.எல்ஏ ராஜேந்திரன் செயல்பட்டு வருகிறார். அவரை விட அவரின் பி.ஏ-வாக இருந்த நேதாஜி ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. இதுதவிர மாவட்ட துணை செயலாளராக இருக்கும் வி.சி.ஆர் குமரனுக்கும் சிட்டிங் எம்.எல்.ஏ-வி.ஜி.ராஜேந்திரனுக்கும் இடையே ஆரம்பத்திலிருந்தே ஒத்துப் போகவில்லை.

இந்தத் தேர்தலில் வி.ஜி.ராஜேந்திரனுக்கு சீட் கிடைக்க கூடாது என்று குமரன் டீம் தீவிரமாக வேலை பார்த்து வருகிறது. அதே நேரத்தில் எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என தன்னுடைய அறிவாலய செல்வாக்கை பயன்படுத்தி வருகிறார் குமரன். மேலும் தொகுதியில் தனக்கென்று தனி டீமை ஏற்படுத்தியிருக்கும் குமரன், தொகுதியில் நலத்திட்ட உதவி என்ற பெயரில் கெத்து காட்டி வருகிறார். ஆனால் அவர் மீது மோசடி குற்றச்சாட்டுக்கள் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தின் படியேறினாலும் அதையும் சமாளித்து வருகிறார்.

திருவள்ளூர்

குமரனுக்கு உள்ளடி வேலைகளை சிட்டிங் எம்.எல்.ஏ-வான ராஜேந்திரனின் டீமும் செய்து வருகிறது. அதன்பின்னணியில் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டாலும் நேதாஜி அன்கோ, திரைமறைவில் இருந்து வருகிறது. நேதாஜி அன்கோவை எம்.எல்.ஏ கண்டிக்கவில்லை என்றால் அவருக்கு கெட்ட பெயர் ஏற்படும்.

குறிப்பாக மண் பிசினஸில் இந்த டீம் கொடி கட்டி பறக்கிறது. சட்டவிரோதமாக இந்த டீம் அள்ளியிருக்கும் மண் விவகாரம் எப்போது பூதாகரமாக வெடிக்கும் என தெரியவில்லை.

அதைத் தொடர்ந்து நகரச் செயலாளராக இருக்கும் ரவிச்சந்திரனுக்கும் சிட்டிங் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரனுக்கும் முட்டல் மோதல் இருந்து வருகிறது. நகர செயலாளராக இருக்கும் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ சுப்பிரமணியனின் மகன். அதனால் அவரும் இந்தத் தடவை சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்திருக்கிறார். அதோடு மாவட்ட அமைச்சர் நாசருக்கு விசுவாசமாக இருப்பதால் சீட் கிடைத்துவிடும் என நம்பிக்கையில் இருந்து வருகிறார். நகர செயலாளர் ரவிச்சந்திரனுக்கு வி.ஜி.ராஜேந்திரன் டீம், நகராட்சி நிர்வாகத்திலிருப்பவர்கள் மூலம் குடைச்சலை கொடுத்து வருகிறது" என்றனர்.

தி.மு.க-வில் யாருக்கு சீட்

திருவள்ளூர் தொகுதியில் இந்தத் தடவை சீட் கேட்டு சிட்டிங் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் குமரன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் புவனேஷ்குமார் உள்பட 13 பேர் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள்.

இதில் புவனேஷ்குமார், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலும் சீட் கேட்டார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்றாலும் வி.ஜி.ராஜேந்திரனின் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இளைஞரணியில் ஆக்டிவ்வாக இருப்பதால் துணை முதல்வர் உதயநிதியின் குட்புக்கில் புவனேஷ்குமார் இருந்து வருகிறார். தொகுதியில் நிலவும் கோஷ்டி பூசலை சமாளிக்க புவனேஷ்குமாருக்கு சீட் கொடுக்கலாமா என்ற யோசனையிலும் தலைமை இருந்து வருகிறது. அதனால் புவனேஷ்குமார் குறித்த முழுவிவரங்களை உளவுத்துறை, பென் டீமை சேகரித்து அனுப்ப கட்சித் தலைமை தெரிவித்ததும் அந்த ரிப்போர்ட்டும் அறிவாலயத்துக்குச் சென்றிருக்கிறது.

இதுகுறித்து அறிவாலய சீனியர்களிடம் கேட்டதற்கு, ``தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு தொகுதிகளிலும் சீட் கேட்பதில் நிர்வாகிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும். தகுதியானவர் யார் என்பது கட்சித் தலைமைக்குத் தெரியும். நிர்வாகிகளுக்கிடையே நடக்கும் போட்டியை கோஷ்டி பூசல் என கூறுவது தவறு. தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆ.ராசா எம்.பி , அனைத்து தரப்பு நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தி தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்" என்றனர்.

முன்னாள் அமைச்சர் ரமணா

குஷியில் முன்னாள் அமைச்சர்

இந்த தொகுதியில் இந்தத் தடவை சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்திருக்கிறார் அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான பி.வி.ரமணா. இவரைத் தவிர இன்னும் சிலர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும் மாவட்டச் செயலாளராக பி.வி.ரமணா இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் குட்கா வழக்கு பி.வி ரமணாவுக்கு ஒரு தடையாக இருக்கிறது. இருந்தபோதிலும் தொகுதியில் பி.வி.ரமணாவுக்கு கடந்த தேர்தல்களில் கடும் போட்டியாக இருந்தவர் அதிமு.க தலைமையுடன் அதிருப்தியிலிருப்பதால் தனக்கு தான் சீட் என முன்னாள் அமைச்சர் தரப்பு குஷியிலிருந்து வருகிறது. !

திருமணம், ஆசைவார்த்தை கூறி மதமாற்றத்தில் ஈடுபடுத்தினால் 7 ஆண்டு சிறை: மகாராஷ்டிரா அரசு புதிய சட்டம்

பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதமாற்ற தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ... மேலும் பார்க்க

கார்க் தீவை தாக்கிய அமெரிக்கா; 'அமெரிக்க தூதரகத்தின் மீதே தாக்குதல்' பலமான பதிலடி கொடுக்கும் ஈரான்

ஈரான் எண்ணெய் ஏற்றுமதியின் முக்கியமான தளம், 'கார்க் தீவு'.இந்தத் தீவை குறி வைத்து தாக்கியுள்ளது அமெரிக்கா.ட்ரம்ப் என்ன சொல்கிறார்?இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் கூறுகையில், "எனது வ... மேலும் பார்க்க

கனிமொழி கையிலெடுத்த `விவகாரம்' சக்சஸ்: `இனிமேல் எல்லாம் அக்கா தான்' - உற்சாக கனி டீம்! பின்னணி என்ன?

திமுக-வில் நடந்த மாற்றம்!சமீபத்தில் திமுக மாணவரணிச் செயலாளராக இருந்த ராஜீவ் காந்திக்கு பதிலாக, திமுக மாணவர் அணி துணைச் செயலாளராக இருந்துவரும் ஜெ. வீரமணி என்ற பெண்மணியை மாணவரணிச் செயலாளராக நியமித்து அற... மேலும் பார்க்க

ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி

இந்தியாவை ரஷ்ய எண்ணெய் வாங்க அமெரிக்கா 'அனுமதி'த்தது குறித்து ஈரான் கேலி செய்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது என்று தான் இந்தியாவிற்கு கூடுதல் 25 சதவிகித வரி விதித்தது அமெரிக்கா. இந்திய... மேலும் பார்க்க