வடமாநிலங்களைப் போல இங்கே பிரச்னை உருவாக்க நினைக்கிறார்கள்: அமைச்சர் சேகர் பாபு
விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் குற்றக் கலந்தாய்வுக் கூட்டம்
விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டத்தில் குற்றத் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளின் தற்போதைய நிலை, புலன் விசாரணை முடியாமல் உள்ள வழக்குகளை விரைந்து புலன் விசாரணை செய்து முடிக்க மேற்கொள்ள வேண்டியவை, சாலைப் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்துதல் போன்ற விவரங்களை காவல் அலுவலா்களிடம் எஸ்.பி. சரவணன் கேட்டறிந்து, உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.
கூட்டத்தில் கூடுதல் எஸ்.பி. திருமால், விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா மற்றும் டிஎஸ்பி.க்கள், காவல் ஆய்வாளா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.