செய்திகள் :

"விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக ஆட்சியில் வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது?" - உதயநிதி கேள்வி

post image

விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க ஆட்சியில், வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க ஆட்சியில், வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது? வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச் செயலாளராக இருந்த திரு. சங்கர் ஐ.ஏ.எஸ். அவர்கள், தொல்லியல் ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகப் போகிறது.

ஆனால், இப்போது வரை வேளாண் துறைக்கு முழுநேரப் பொறுப்பில் புதிய செயலாளர் நியமிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவது, உழவர் பெருமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயம்
விவசாயம்

தனி நிதிநிலை அறிக்கையைக் கொண்ட வேளாண் துறை போன்ற ஒரு முக்கியத் துறைக்கு முழுநேரப் பொறுப்பில் செயலாளர்கூட இல்லாமல் இருப்பதை என்ன காரணம் சொல்லி இவர்களால் நியாயப்படுத்த முடியும்?

பருவமழை தொடங்கவுள்ள நேரத்தில், வேளாண்மைத் துறைக்கு நிலையான நிர்வாகத் தலைமையும், துரிதமான ஒருங்கிணைப்பும் தேவை என்பதை எவரும் மறுக்க முடியாது. குறிப்பாக, விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்புடைய முடிவுகள் தாமதமின்றி எடுக்கப்படுவதற்கும், மாவட்ட அளவிலான பணிகளைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் இது அவசியமானது.

இதனைக் கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய, துறை அமைச்சரும் முதலமைச்சரும் 'வேறு வேலைகளில்'தான் மும்முரம் காட்டுகின்றனர். த.வெ.க. ஆட்சிக்கு வந்ததுமே, பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி செய்தார்கள். இயற்கையால் குறுவை பொய்த்து, த.வெ.க. அரசின் சிந்தனையற்ற செயல்பாட்டால் சம்பா சாகுபடியும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது.

இப்படித் தொடர் ஏமாற்றங்களால் விரக்தியில் உள்ள விவசாயப் பெருமக்கள், தமிழ்நாடெங்கும் போராடிவருகின்றனர். நேற்றுகூட, கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் வராததால், முத்துப்பேட்டையில் விவசாயிகள் சாலை மறியல் செய்துள்ளனர். தண்ணீர் திறந்துவிடக் கோரி, விவசாயிகள் வீராணம் ஏரியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடிசெய்ய வலியுறுத்தி, சென்னையில் வருகிற 14ஆம் தேதி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர். இத்தகைய சூழலில், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைக்கு அனுபவம் வாய்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு, உழவர்களின் துயர் துடைப்பதற்கான பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஆனால், அந்தத் துறையைப் பொறுப்பு ஏற்பாட்டில் விட்டிருப்பது, வேளாண்மைக்குடி பெருமக்களின் நலனில் இந்த அரசுக்குத் துளியும் அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. 'செயல்படாத அமைச்சர், இல்லாத செயலாளர்' எனத் த.வெ.க. ஆட்சியைப் போலவே வேளாண் துறையும் திண்டாடுகிறது.

உலகுக்கே உணவளிக்கும் உழவைக் காப்பாற்றுவதில் இனியும் காலதாமதம் செய்யாமல், புதிய முழுநேர வேளாண்மைத் துறைச் செயலாளரை உடனடியாக நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

செவிலியர்கள் விவகாரம்: ``இரவு நேரத்தில் கைது... ஏற்றுக்கொள்ள முடியாதது" - பிரேமலதா விஜயகாந்த்

சமவேலைக்கு சம ஊதியம் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேட்பட்ட செவிலியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, செவிலியர்களின் போராட்டத்துக்கு திமுக ஆ... மேலும் பார்க்க

மதுராந்தகம் என்றால் நினைவுக்கு வருபவர்; தவெக மேடையில் திமுக தளபதி பெயர் - யார் இந்த மதுராந்தகத்தார்?

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த சில தினங்களாகவே தமிழ்நாடு முழுக்க கவனம் ஈர்த்த ஊர்கள் இவை என்றால் மிகையில்லை.இந்த இ... மேலும் பார்க்க

'பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரை துடைப்பதற்காக நீளும் கரங்கள், ஏன் செவிலியர்களின்..!'- உதயநிதி

சமவேலைக்கு சம ஊதியம் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேட்பட்ட செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, செவிலியர்களின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் விதமாக முன... மேலும் பார்க்க

சீவலப்பேரி : `கீழடியில கெடச்ச மாதிரியே இருந்துச்சு...' - `தாமிரபரணிக் கரை' வரலாற்றை ஆராயும் மாணவர்!

திருநெல்வேலி அருகே குப்பக்குறிச்சியைச் சேர்ந்த காலபெருமாள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் முதலாமாண்டு மாணவர். சிறுவயது முதலே பண்டைய நாகரிகம் குறித்தும், அந்தக் காலத்து மக்... மேலும் பார்க்க

செவிலியர்கள் போராட்டம்: ``ஈவு இரக்கமின்றி கைது செய்ய எப்படி மனம் வந்ததோ?" - ஸ்டாலின் கண்டனம்

சமவேலைக்கு சம ஊதியம் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேட்பட்ட செவிலியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, செவிலியர்களின் போராட்டத்துக்கு திமுக ஆ... மேலும் பார்க்க

மாணவியிலிருந்து போராட்டத்தின் முகமாக.! - ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் நேஹா போரா - யார் இவர்?

இந்தியாவின் சமீபத்திய மாணவர் மற்றும் இளைஞர் போராட்டங்களில் கவனம் பெற்ற ஒருவராக மாறியிருக்கிறார் நேஹா போரா. மாணவர் அரசியல், கல்வி உரிமை, ஜனநாயக உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து குரல் எ... மேலும் பார்க்க