செய்திகள் :

வீடூர் அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

post image

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக வீடூர் அணை நிரம்பியது. இதனால் பாதுகாப்பு கருதி அனைத்து கதவுகளையும் திறந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு, கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் வீடூர் அணை பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அதன் கொள்ளளவான 605 மில்லியன் கன அடியில் (32அடி) 487.52 மில்லியன் கன அடி(30.5அடி) நிரம்பியது அணைக்கு வினாடிக்கு 36, 203 கன அடி நீர் வரத் தொடங்கியது.

இதையடுத்து, அணை கண்காணிப்பு அதிகாரிகள் சுற்றுப்புறக் கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சனிக்கிழமை இரவு 11:30 மணி அளவில் அபாய சங்கு ஒலியை எழுப்பினர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:30 மணி அளவில் அணையில் 9 கதவுகளையும் திறந்து, 36,203 கன அடி உபரி நீரை அணையிலிருந்து வெளியே திறந்து விட்டனர்.

அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதன் காரணமாக சங்கராபரணி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டு வெளியேறியது.

இதையும் படிக்க: புதுவையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதி கனமழை!

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணி வரை வீடூர் அணைப்பகுதியில் 264 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

வீடூர் அணையின் நீர் வரத்துகளை நீர் வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா ஞாயிற்றுக்கிழமை காலை ஆய்வு செய்தார். உதவிச் செயற்பொறியாளர் ரமேஷ், உதவிப் பொறியாளர் பாபு ஆகியோர் அணை நீர்வரத்து குறித்து தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் .

விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார் தலைமையில் காவல் ஆய்வாளர் பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட போலீஸார் அணை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரோஜா - 2 தொடர் அறிவிப்பு!

ரோஜா தொடரின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சன் தொலைக்காட்சியில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' தொடர், கடந்த 2022 டிசம்பரில் நிறைவு பெற்றது. ரோஜா தொடரில... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.பகத் பாசில் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான மலையாள மொழிப் படமான பொகெயின்வில்லா திரைப்படம் நாளை(டிச. 13) ச... மேலும் பார்க்க

வீட்டிலேயே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை பலி!

புதுக்கோட்டையில் வீட்டிலேயே உறவினர்களால் பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை பலியானது.புதுக்கோட்டை: அரந்தாங்கியில் வீட்டிலேயே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை, பிறந்த சில மணிநேரங்களிலேயே பலியானது. அரந்தாங்... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!

குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் பார்க்க

கடைசி மழைமேகங்கள்... சென்னைக்கு இன்றிரவோடு மழைக்கு ரெஸ்ட்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வால், சென்னையை நோக்கி வரும் மழை மேகங்களால் பெய்யும் கடைசி சுற்று தற்போது பெய்யும் மழையாக இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மென் தெரிவித்துள்ளார்.வானிலை நிலவரங்களை அவ்வபோது வெளியிடு... மேலும் பார்க்க

கொண்டாட்டத்தின்போது விபரீதம்! துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுமி பலி!

ஹரியாணாவில் திருமணக் கொண்டாட்டத்தின்போது சுடப்பட்ட துப்பாக்கியின் குண்டு பாய்ந்து 13 வயது சிறுமி பலியானார்.சண்டிகர்: திருமணக் கொண்டாட்டத்தின்போது சுடப்பட்ட துப்பாக்கியின் குண்டுப் பாய்ந்ததில் 13வயது ச... மேலும் பார்க்க