செய்திகள் :

வீரமணி போக்சோ வழக்கு: ``எனக்கும் வீரமணிக்கும் தொடர்பா?" - அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்!

post image

ஜெம் நிறுவனர் வீரமணி வழக்கு தமிழ்நாட்டில் விவாதமாகியிருக்கிறது. ஏற்கெனவே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் விசாரணையில் இருக்கும் அவர் மீது, நேற்று மற்றொரு புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆளும், தவெக அரசும், எதிர்க்கட்சியான திமுக-வும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், இடைத்தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ``ஜெம் வீரமணி மீது புகார்கள் எழுந்தும் கடந்த இரண்டரை மாதங்களாக தமிழ்நாடு அரசு அவரைப் பாதுகாத்து காப்பாற்றி வருகிறது. வீரமணியும் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வனும் நெருங்கிய குடும்ப நண்பர்கள். இதை அவரே பேசியிருக்கிறார். அந்த நட்பின் காரணமாகவே அரசு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்து வருகிறது." என விமர்சித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

இதற்கு முன்னர் முன்னாள் சபாநாயகர் அப்பாவு, ``முதலமைச்சரின் நண்பர்கள் ஆன ஆந்திர ரெட்டி கேங்க் நடத்தும் கனிம நிறுவனங்களிடம், ஜெம் வீரமணியின் கனிம நிறுவனங்களை அபகரித்துக் கொடுக்க நடைபெற்றதாக கூறப்படும் முயற்சிகளை இல்லை என்று மறுக்க முடியுமா CM Sir...? உங்கள் மடியில் கனமில்லை என்றால் ஜெம் வீரமணியுடன் தொடர்பில் இருந்த இரண்டு அமைச்சர்கள் மற்றும் பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்துவிட்டு அவர்களை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த தயாரா CM Sir..?" எனக் குறிப்பிட்டிருந்தார். அதனால் இந்த விவகாரம் விவாத களத்துக்கு வந்தது.

இந்த நிலையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் நடைபெற்ற தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் தொடக்க நிகழ்ச்சியில், வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் கலந்துகொண்டார். அப்போது இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், ``எடப்பாடி பழனிசாமியின் கருத்துகளை முற்றிலும் தவறானது.

லோகேஷ் தமிழ்ச்செல்வன்
லோகேஷ் தமிழ்ச்செல்வன்

நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, மேடை நாகரிகத்திற்காகப் பேசிய வார்த்தைகளை அடிப்படையாக வைத்து எடப்பாடி பழனிசாமி தேவையற்ற அரசியலை செய்து வருகிறார். மேடை மரியாதையை ஒரு பெரிய குற்றச்சாட்டாக மாற்ற முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, பழக்கமா இல்லையா என்பதை ஆராய்ந்து பாருங்கள் உண்மை புரியும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"அதிமுக-வுக்கு திமுக வாக்கு கேட்கிறது; திமுக-வுக்கு அதிமுக வாக்கு கேட்கிறது" - ஆதவ் அர்ஜுனா சாடல்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.க கொள்கைக் கட்சி என்று கூறிக்கொண்டு, தற்போது வரை ஒரு கொள்கை ரீதியான பிரசாரத்தை முன்னெடுத்த... மேலும் பார்க்க

மின்சாரத்துறையில் தனியார்: ``இதற்கு பெயர்தான் தூய ஆட்சியா? வெட்கக்கேடு! " - சீமான் காட்டம்

வீடுகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என மின்வாரியம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்... மேலும் பார்க்க

’சாதிய வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது’–அமைச்சர் வன்னிஅரசு எச்சரிக்கை

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஒடையகுளம் பேரூராட்சி கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் என்பவரின் கையை, ஆறுச்சாமி என்பவர் கடந்த 23ம் தேதியன்று அரிவாளால் வெட்டினார். இதில் அவரது கை துண்டான நிலையில்,... மேலும் பார்க்க

"ரூ.4000 வந்ததா?; வேலையில்லா பட்டதாரி படத்துல நடிச்ச தனுஷே அரசியலுக்கு வந்திட்டாரு.!” - கனிமொழி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. அந்தவகையில் நேற்றைய தினம் திமுக தாராபுரம் வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து எம்.பி கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்... மேலும் பார்க்க

`ராமர் பணக்காரர்களின் கடவுள், சிவன் ஏழைகளின் கடவுள்' - ரேவந்த் ரெட்டி கருத்துக்கு பாஜக கண்டனம்

ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கடவுள்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், "ஜெய் ஸ்ரீ ராம்" என... மேலும் பார்க்க

``ஞானேஷ் குமார் குற்றவாளி; உச்ச நீதிமன்றமும் பதில் சொல்லியாக வேண்டும்" - EX பாஜக அமைச்சர் RK சிங்

இந்தியாவின் முன்னாள் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை கேபினட் அமைச்சரும், முன்னாள் இந்திய ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரியுமான ஆர். கே. சிங் தன் எக்ஸ் பக்கத்தில் SIR குறித்து நீண்ட ... மேலும் பார்க்க