செய்திகள் :

வேலூர்: உயிரோடு இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் கேட்ட விவசாயி - என்னக் காரணம் தெரியுமா?

post image

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள கே.ஜி.ஏரியூரைச் சேர்ந்தவர் காந்தி (வயது 47). இவர் தனது மனைவி மேரியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றை அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது, ``நான் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறேன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எனது தந்தை ஆனந்தன் இறந்துவிட்டார். அவரது பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்கினர். அப்போது தவறுதலாக எனது பெயரையும் சேர்த்து நீக்கிவிட்டனர். இதனால், எனது குடும்பத்துக்குக் கிடைக்க வேண்டிய முறையான ரேஷன் பொருள்கள் கிடைப்பதில்லை.

மனைவியுடன் வந்து மனு அளித்த விவசாயி

எனது பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க அணைக்கட்டு தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், எனது மகன்கள் 2 பேரும் ராணுவத்தில் சேர உள்ளனர். அவர்கள் பணியில் சேர குடும்ப அட்டையில் தந்தை பெயர் இல்லாததால், இறப்பு சான்றிதழ் கேட்கின்றனர். எனது மகன்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றால் எனது பெயர் ரேஷன் கார்டில் சேர்க்கப்பட வேண்டும், அல்லது எனக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். விவசாயியின் இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு விவகாரம்: 16 நாள்களுக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரின் உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த 7-ம் தேதி மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர்... மேலும் பார்க்க

"கம்யூனிஸ்ட்களின் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" - வீரபாண்டியன் பதிலடி

"கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்திருக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கும், தவெகவினருக்கு... மேலும் பார்க்க

'நெடுஞ்சாலைகளில் 70 கி.மீக்கு மேல் சென்றால் அபராதம்!' - அமைச்சர் ஆதவ்வின் புது திட்டம்!

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜூனா, அத்துறையின் பொறியாளர்களுடன் துறை சம்பந்தமான பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார். அதில், அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ள... மேலும் பார்க்க

'மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?'- வன்னியரசு பரிசீலினைக்கு கிருஷ்ணசாமி கண்டனம்!

சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் வழங்கப்பட்டு வருவதை போல் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் வன்னியரசு சைதாப்பேட்டை எம்.சி.... மேலும் பார்க்க

'எதிர்பார்க்கப்பட்டதுதான்' ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதின் கட்சி - காரணம்?

நேற்று (செப்டம்பர் 21) ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ஸ்டேட் டூமாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகின.இந்தத் தேர்தலில் கிடைத்திருக்கும் ரிசல்ட் என்னவோ அனைவரும் எதிர்பார்த்ததுதான்.ரஷ்ய அதிபர் புதினின் ‘ஐ... மேலும் பார்க்க

”நம்ம கட்சி திமுக கூடாரமா மாறிட்டு வருது தலைவரே...” - விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற தவெக நிர்வாகி

தூத்துக்குடி மாவட்ட த.வெ.கவில், புறநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் மதன் ராஜாவும், மத்திய மாவட்டச் செயலாளராக அமைச்சர் ஸ்ரீநாத்தும், தெற்கு மாவட்டச் செயலாளராக பிரைட்டரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நில... மேலும் பார்க்க