செய்திகள் :

வேலூர்: மோர்தானா அணையில் 9 நாள்களுக்கு நீர்த் திறப்பு; 2,510 ஏக்கர் நிலம் பாசனம் பெற வாய்ப்பு!

post image

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள மோர்தானா கிராமத்தில் கௌண்டன்யா ஆற்றின் குறுக்கே `மோர்தானா அணை’ அமைந்திருக்கிறது. இந்த அணை 261.36 மில்லியன் கனஅடி கொண்டது. இதில் நேற்றைய நிலவரப்படி, பயன்படுத்தக்கூடிய நீரின் அளவு 174.96 மில்லியன் கன அடி.

இந்த நிலையில், மோர்தானா அணையில் இருந்து பாசன வசதிக்காகவும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்காகவும் அரசாணை பிறக்கப்பட்டதையடுத்து, நேற்றிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதாவது, பொதுக்கால்வாய் வழியாக கௌண்டன்யா ஆற்றில் விநாடிக்கு 75 கனஅடி வீதம் தண்ணீரும், இடதுபுற மற்றும் வலதுபுற பிரதான கால்வாய்களில் தலா 75 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆக மொத்தம், விநாடிக்கு 225 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

மோர்தானா அணை
மோர்தானா அணை

செப்டம்பர் 1-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாள்களுக்குத் திறக்கப்படும் நீரின் மூலம் 9 ஏரிகள் பயன்பெற்று சுமார் 2,510 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற வாய்ப்புள்ளது.

மேலும், மோர்தானா, கொட்டாரமடுகு, ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, ரங்கசமுத்திரம், மீனூர், தட்டப்பாறை, ஆண்டிகான்பட்டி, அக்ராவரம், மூங்கப்பட்டு, பெரும்பாடி, எர்த்தாங்கல், லிங்குன்றம், செருவங்கி மற்றும் குடியாத்தம் நகரம் ஆகிய 15 கிராமங்களில் 408 ஆழ்துளை கிணறுகள் மற்றும் 1,867 திறந்தவெளி விவசாய கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

பசுமை சந்தை!

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர... மேலும் பார்க்க

கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய முதல்வர்... விவசாயிகளுக்கு நிம்மதி தந்த இரட்டை அறிவிப்புகள்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!“தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் நெல் கொள்முதலில் நடைபெறும் ஊழல் ஒழிக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் குறு, சிறு விவசாயிகள் வாங்கிய கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட... மேலும் பார்க்க

அமெரிக்க கம்பெனி வேலையை உதறிவிட்டு முருங்கை விவசாயம் - ரூ.30 லட்சம் சம்பாதிக்கும் எஞ்சினியர்!

மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயிகள் பலர் விவசாயத்தை நவீன முறையில் பெரிய அளவில் செய்வது வழக்கம். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள குருத்வாடி என்ற இடத்தை சேர்ந்த சாகர் காரே என்ற மெக்கானிக்க... மேலும் பார்க்க

Mettur: வினாடிக்கு 7,000 கன அடி; 8 கண் மதகுகள் வழியாக சீறிப்பாயும் நீர் - கழுகு பார்வைக் காட்சிகள்!

மேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வைமேட்டூர் அணை கழுகு பார்வை... மேலும் பார்க்க

வயலில் அழுகும் தக்காளி; உண்மையில் குப்பையா? உள்ளே இருக்கும் பெரிய பிசினஸ் - விவசாயிகளுக்கு டிப்ஸ்!

தக்காளி விலை குறையும் நேரங்களில், அறுவடை செய்தாலும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். குறிப்பாக அறுவடைக் கூலி, போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவை அதிகமாகும்போது, த... மேலும் பார்க்க