நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சி...
வேலைக்கு ஒரு கும்பிடு! SIP முதல் SWP வரை: நிதிச் சுதந்திரத்தின் 3 லெவல்கள்!
மாதச் சம்பளம் வாங்கி வாழ்க்கையை ஓட்டுவது கயிறு மேல் நடப்பது போல இருக்கிறதா? ஒரு பெரிய தொகையை சேர்த்து சீக்கிரம் நிதிச் சுதந்திரம் அடைந்து உங்களுக்குப் பிடித்தபடி, உங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் ஈடுபட நினைக்கிறீர்களா? பர்ஸைத் தடவிப் பார்க்காமல் வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா?
நிதிச் சுதந்திரம் (Financial Freedom) என்பது ஒரே நேர்க்கோட்டுப் பயணம் அல்ல; அது மூன்று நிலைகளைக் கொண்ட ஒரு சுவாரசியமான விளையாட்டு. இவற்றைக் கற்றுக்கொண்டால் நீங்கள் வெல்வது உறுதி!

லெவல் 1: தற்காப்பு ஆட்டம்
* அடுத்த ஒரு வருடத்திற்கான அத்தியாவசியச் செலவுகளைச் சேமித்து வைப்பதே முதல் இலக்கு. இதுவே உங்களின் அவசரகால நிதி (Emergency Fund).
* ‘Good Enough’ ஃபார்முலா: ₹80,000 போனுக்கும் ₹20,000 போனுக்கும் ஒரே பயன்பாடுதான். பொருள்களை வாங்கும்போது ஆடம்பரத்தை விட தேவையே முக்கியம் என்று உணந்து செயல்படுங்கள்.
* பெரிய செலவுகளில் கைவையுங்கள்: என்றோ ஒருநாள் ஆகும் பெரும் செலவுகளைக் குறைப்பதை விட, வாடகை, போக்குவரத்து, உணவு, டீ போன்ற 70% செலவுகளில் மாற்றத்தைக் கொண்டு வருவது, மிகப்பெரிய சேமிப்புக்கு வழிவகுக்கும்.
* கெட்ட கடன் வேண்டாம்: 16% வட்டி கொண்ட கடனையும் வைத்துக்கொண்டு, 8% லாபம் தரும் முதலீட்டில் பணத்தைப் போடுவது, கீழ்நோக்கி நகரும் எஸ்கலேட்டரில் மேலே ஓடுவதற்குச் சமம். வீட்டுக் கடன், கல்விக் கடன் தவிர்த்த பிற கடன்களுக்கு நோ சொல்லுங்கள்.

லெவல் 2: அதிரடி ஆட்டம் (வருமானத்தை உயர்த்தும் நிலை)
பணத்தை சேமிக்க ஆரம்பித்துவிட்டோம். இனி வருமானத்தைப் பெருக்கும் நேரம்.
* ரியல் எஸ்டேட் / ஹவுஸ் ஹேக்கிங்: உங்கள் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடுவது அல்லது வணிகப் பயன்பாட்டிற்குத் தருவதன் மூலம் வீட்டின் செலவையே வருமானமாக மாற்றலாம். இதுபோல என்னென்ன விஷயங்களில் உங்களுக்குப் பணம் வர வாய்ப்புண்டோ, அவற்றை இன்றே செயல்படுத்துங்கள்.
* சைடு பிசினஸ்: உங்கள் தற்போதைய வேலையை, உங்கள் சொந்த பிசினஸிற்கான 'ஏஞ்சல் இன்வெஸ்டராக' பாருங்கள். நீங்கள் செய்யும் சைடு பிசினஸ் நிலையான வருமானம் தரும் வரை தற்போதைய வேலையைத் தொடருங்கள்.
* வாழ்க்கை முறை பணவீக்கம் (Lifestyle Inflation): வருமானம் கூடும்போது உடனே காரையோ, பெரிய வீட்டையோ வாங்காதீர்கள். அது உங்கள் வளர்ச்சியை அப்படியே விழுங்கிவிடும்.

லெவல் 3: நிதிச் சுதந்திரம் (SIP முதல் SWP வரை)
நீங்கள் வேலை செய்வதை நிறுத்தினாலும், உங்கள் முதலீடுகள் மூலம் பணம் வந்துகொண்டே இருப்பதே நிதிச் சுதந்திரம்.
* உங்கள் Freedom Number: உங்கள் ஒரு வருடச் செலவை 25-ஆல் பெருக்கிக்கொள்ளுங்கள். அந்தத் தொகைதான் உங்களின் இப்போதைய இலக்கு!
* SIP எனும் மாயாஜாலம்: பங்குகளைத் தேர்ந்தெடுத்து மன அழுத்தத்திற்கு ஆளாவதை விட, நிதானமாக மியூச்சுவல் ஃபண்ட்ஸ் SIP முறையில் முதலீடு செய்யுங்கள். சந்தையின் ஏற்ற இறக்கங்களைத் தாண்டி, காம்பவுண்டிங் வளர்ச்சி உங்களுக்குப் பெருஞ்செல்வத்தை உருவாக்கித் தரும்.
* SWP மூலம் ஓய்வூதியம்: போதுமான நிதி திரண்டதும், மியூச்சுவல் ஃபண்ட்ஸ்-ல் இருந்து Systematic Withdrawal Plan (SWP) மூலம் மாதந்தோறும் உங்கள் தேவைகளுக்கான பணத்தை எடுத்துக்கொண்டு, மீதிப் பணத்தை தொடர்ந்து வளர விடலாம்.
முதலில் சுதந்திரம், பிறகே சொகுசு! சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து, இன்றே முதலீட்டுப் பயணத்தைத் தொடங்குங்கள்!

SIP முதல் SWP வரை - பட்ஜெட் டு ரிட்டைர்மென்ட் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை மிஸ் பண்ணிடாதீங்க!
நாளை (புதன்), செப்டம்பர் 09 மாலை 7 மணிக்கு நடைபெறும், லாபம் வழங்கும் 'SIP to SWP' சிறப்பு நிதி வழிகாட்டல் ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.
மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அடிப்படைகள், முதலீட்டு விதிகள், ₹1 கோடி சேர்க்கும் வழிகள் போன்ற நிதி சார்ந்த யுக்திகளை அறிந்து வாழ்வில் முன்னேறுங்கள்!
நிகழ்ச்சிக்கு இப்போதே முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-sep09-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_sep09_2026




















