செய்திகள் :

ஷிண்டே அணிக்குத் தாவிய சட்டமேலவை உறுப்பினர் சச்சின்; தொடர்ந்து உத்தவிடமிருந்து விலகும் விசுவாசிகள்!

post image

மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்கு தொடர்ந்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. சமிபத்தில்தான் உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி-க்கள், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து உத்தவ் தாக்கரே மீள்வதற்குள் மேலும் ஓர் அதிர்ச்சியை ஏக்நாத் ஷிண்டே அணி கொடுத்து இருக்கிறது. உத்தவ் தாக்கரே கட்சி சார்பாக சட்டமேலவை உறுப்பினராக இருப்பவர் சச்சின் அஹிர். இவர் திடீரென ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்துள்ளார்.

சட்டமேலவையில் துணைத் தலைவர் பதவிக்கான பதவி நீண்ட நாள்களாக காலியாக இருந்தது. அந்தப் பதவிக்கு சச்சின் அஹிர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வேட்பு மனு தாக்கலின்போது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுனேத்ர பவார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சச்சின் அஹிர் மும்பை அரசியலில் உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நம்பிக்கையான ஒரு நபராக இருந்தார்.

அதோடு தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற மும்பை ஒர்லி தொகுதியை ஆதித்ய தாக்கரேவுக்காக விட்டுக்கொடுத்தார். எனவே சச்சின் அஹிர் உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமான ஒரு தலைவராக இருந்தார். ஆனால் அவரும் அணி மாறி இருப்பது, உத்தவ் தாக்கரேவால் ஜீரணிக்க முடியவில்லை. மில் தொழிலாளர்கள் சங்கத் தலைவராக வாழ்க்கையைத் தொடங்கிய சச்சின் அஹிர், ஒர்லி தொகுதியில் இருந்து மூன்றுமுறை வெற்றி பெற்று இருக்கிறார்.

அவர் தனது தொகுதியை ஆதித்ய தாக்கரேவுக்கு விட்டுக்கொடுத்ததால், அவருக்கு சட்டமேலவை உறுப்பினர் பதவியை உத்தவ் தாக்கரே கொடுத்தார். வரும் நாள்களில் உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த மேலும் பல எம்.எல்.ஏ-க்கள் தங்களது கட்சியில் வந்து சேருவார்கள் என்று ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் உத்தவ் தாக்கரே திணறி வருகிறார்.

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க