செய்திகள் :

’ஸ்டாலினின் அருவருப்பான பேச்சை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’ –அமைச்சர் சம்பத்குமார்

post image

தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “பெண்களை இழிவுபடுத்திப் பேசும் தி.மு.க எனும் ஆபாச நதியின் பிறப்பிடமே. உங்கள் தரக்குறைவான பேச்சுகள், உங்கள் அரசியல் பண்பாட்டின் அவலட்சணத்தை அம்பலப்படுத்துகின்றது. பெண்களை அவமதிப்பதையே தொழிலாகக் கொண்ட உங்களுக்கு வெட்கமும், நாவடக்கமும் இல்லையா? தமிழகத் தாய்மார்கள் உங்கள் ஆணவத்தையும், அருவருப்பான பேச்சுகளையும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

.

இந்த இடைத்தேர்தலில் உங்கள் அகந்தைக்கு விழும் அடி, பெண்களை இழிவுபடுத்தும் ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத பாடமாக இருக்கும். உங்கள் அநாகரிகப் பேச்சுக்கு, தமிழகப் பெண்களிடம் பகிரங்கமாகவும் நிபந்தனையின்றியும் மன்னிப்பு கேளுங்கள். சாக்குப்போக்கு சொல்லி ஒளிந்துகொள்ளாமல், தவறை ஒப்புக்கொள்ளும் நேர்மையாவது உங்களுக்கு இருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தலை எதிர்கொள்ளும் பஞ்சாப், உ.பி. மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் - காங்கிரஸ் முயற்சி பலனளிக்குமா?

பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறது. இத்தேர்தலில் தங்களுக்கு 150 தொகுதிகள்... மேலும் பார்க்க

Flydubai இணை விமானி ஹமாம் அல்ஹமாமி ‘இஸ்லாமியத் தீவிரவாதி’ - நெதன்யாகு சொன்னது என்ன?

ஃபிளைதுபாய் விமானத்தின் விபரீத சம்பவத்திற்குக் காரணமானவர் ஓமனைச் சேர்ந்த ஹமாம் அல்ஹமாமி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சிரியாவில் பெரும்பாலான நேரத்தைக் கழித்ததாகவும், அப்போதுதான் அவர் தீவிரவாதக... மேலும் பார்க்க

'2 நிமிடக் கதை' இந்தியாவில் உங்களுக்கு ஏதேனும் அநீதி? ராகுல் காந்தி தொடங்கியிருக்கும் புது வலைதளம்!

நேற்று காந்தி ஜெயந்தி. இதை முன்னிட்டு, இந்தியாவில் நடக்கும் பாதிப்புகள் மற்றும் பிரச்னைகளை முன்னெடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலைதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்த வலைதளத்தில் த... மேலும் பார்க்க

’அடுத்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக ஒன்றாக தேர்தலை சந்திப்பார்கள்’ – அமைச்சர் நிர்மல்குமார் ஆரூடம்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தாராபுரத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், உண்மையான முகத்தை பிரச்ச... மேலும் பார்க்க

`ஹெராயின், மெத்தம்பெட்டமைன் கடத்திய கடத்தல் மன்னன் இந்தியாவுக்கு நாடு கடத்தல்' - அமித் ஷா பெருமிதம்

துருக்கியில் தலைமறைவாக இருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் நவ்பிரீத் சிங்கை கைது செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..."துருக்கியில் த... மேலும் பார்க்க

EC: 'SIR-ல் Form 6 குறித்து ஏன் மேற்கு வங்க தேர்தலின் போது சொல்லவில்லை?' - சிதம்பரம் கேள்வி

‘எங்களின் கவனத்திற்குக் கொண்டுவராமல் 10 மாதங்களில் 14 முடிவுகள் எடுக்கப்பட்டது’ என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகத் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோ... மேலும் பார்க்க