செய்திகள் :

`ஸ்டாலினை அரசியலில் உருவாக்கியவர் 'நான்' இல்லை; இந்திரா காந்தி' - கருணாநிதியே சொல்கிறார் |Vote Vibes

post image

பிப்ரவரி 1, 1976.

உள்நாட்டுப் பாதுகாப்பு பரமாரிப்புச் சட்டத்தின் (MISA) கீழ் கைது செய்யப்பட்டார் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.

திருமணமான கிட்டத்தட்ட ஐந்து மாதங்களிலேயே கைது செய்யப்பட்டார் அவர்.

அதன் பிறகு, சுமார் ஓராண்டிற்கு பிற்கு, 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார் ஸ்டாலின்.

இந்த இடைப்பட்ட காலங்களில் அடி, உதை, சித்ரவதை என பல கொடுமைகள் சிறையில் ஸ்டாலினுக்கு நடந்துள்ளன.

இந்த எமெர்ஜென்சி காலம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி
1980-களில் ஜூனியர் விகடனில் வந்த ஒரு பேட்டி...

அதில் ஸ்டாலினைப் பேட்டிக் காண கோபாலபுரம் சென்றிருக்கிறார் விகடன் நிருபர்.

அப்போது தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறியதாவது...

"எல்லோரும் ஸ்டாலினை நான் உருவாக்குவதாகச் சொல்கிறார்கள். அது தவறு. நான் உருவாக்கவில்லை. அவனை உருவாக்கி விட்டதே இந்திரா காந்தி தானே!

பேசாமல் கிடந்த அவனை, மிசா கைதி ஆக்கிச் சிறையில் போட்டு, அரசியலில் அவனை உருவாக்கியதே இந்திராகாந்தி தானே" என்று சொல்லியிருக்கிறார்.

இது இப்போது...

2017-ம் ஆண்டு கோவையில் நடந்த இந்திரா காந்தி நூற்றாண்டு நிறைவு விழாவில் ஸ்டாலினும், "ஒரு வகையில் நான் தீவிர அரசியலுக்கு வரக் காரணமானவர் இந்திரா காந்தி" என்று அதே கருத்தைக் கூறியிருக்கிறார்.

புதுச்சேரி: 291 வேட்பாளர்களில் 66 பேர் மீது கிரிமினல், பாலியல் வழக்குகள்! -அதிர வைக்கும் ரிப்போர்ட்

புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வேட்பாளர்களின் சொத்து மற்றும் குற்ற வழக்குகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் புதுச்... மேலும் பார்க்க

விஜய் மீது வழக்கு: "எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முடக்க நினைத்த அதே பாணி..." - ஆதவ் அர்ஜுனா

சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு பரபரப்பாகி வருகிறது. வேட்பாளர் மனுத்தாக்கல் செய்து, தொகுதிக்குச் சென்று பிரசாரத்தையும் வேட்பாளர்கள் தொடங்கிவிட்டனர். த.வெ.க சார்பில் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக த... மேலும் பார்க்க

மனிதாபிமான உதவி: இந்தியா வரவிருந்த விமானம் மீது தாக்குதல் - ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் பலமுனை மோதலாக உருவெடுத்துள்ளது. ஈரானிலிருந்து இந்தியாவிற்கு மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்காகப் புறப்படவிருந்த விமானம் ஒன்று அமெரிக்க வான்வழித் தாக்குதலுக... மேலும் பார்க்க