செய்திகள் :

புதுச்சேரி: 291 வேட்பாளர்களில் 66 பேர் மீது கிரிமினல், பாலியல் வழக்குகள்! -அதிர வைக்கும் ரிப்போர்ட்

post image

புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வேட்பாளர்களின் சொத்து மற்றும் குற்ற வழக்குகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ்.

அந்த அறிக்கையில், `வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிடும் பணியை, கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆறு தேர்தல்களாக செய்து வருகிறது புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பகம். அதன்படி புதுச்சேரி 2026 சட்டமன்றத் தேர்தலில் 30 தொகுதிகளில் 294 பேர் போட்டியிடுகின்றனர்.

அதில் தேசிய கட்சிகளைச் சேர்ந்த 34 பேரும், மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த 63 பேரும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளைச் சேர்ந்த 80 பேரும், சுயேச்சையாக 117 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரி
புதுச்சேரி அரசு

அவர்களில் 291 வேட்பாளர்களின் சுய உறுதிமொழி வாக்குமூலங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 66 பேர் (23%) மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 28 பேர் (13%) மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இரண்டு வேட்பாளர்கள் மீது கொலை வழக்கும் (IPC 302), மூன்று வேட்பாளர்கள் மீது பெண்ணை மானபங்கப்படுத்திய வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் மூன்று பேர், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நான்கு பேர், பா.ஜ.க-வில் ஐந்து பேர், தி.மு.க-வில் ஆறு பேர், அ.தி.மு.க-வில் ஒருவர் என 19 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல மொத்த வேட்பாளர்களில் 119 பேர் அதாவது 41 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள்.

என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 16  வேட்பாளர்களும், பா.ஜ.க சார்பில் 10 வேட்பாளர்களும், ல.ஜ.க சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள். அதேபோல காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 21 பேரில் 17 பேர் கோடீஸ்வர்கள்.

இந்த வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 7.21 கோடி. பெரும் பணக்காரர்களாக ல.ஜ.க வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ரூ.609 கோடி சொத்துகளுடன் முதலிடத்திலும், பா.ஜ.க மாநிலத் தலைவர் ராமலிங்கம் ரூ.115 கோடிகளுடன் இரண்டாம் இடத்திலும், அமைச்சர் நமச்சிவாயம் ரூ.85 கோடியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

அதேபோல் அதிக ஆண்டு வருவாய் உள்ளவர்களில் ரூ.59 கோடியுடன் ஜோஸ் சார்லஸ் முதலிடத்திலும், ரூ.6 கோடியுடன் பா.ம.க கோபாலகிருஷ்ணன் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர்.

66 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்

அதேபோல ரூ.1 கோடியுடன் சுயேச்சை வேட்பாளர் வசந்தகுமார் மூன்றாம் இடத்திலும் இருக்கிறார். மேலும் வேட்பாளர்களில் 134 பேர் பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேலும் படித்தவர்கள். 125 வேட்பாளர்கள் 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள்.

25 பேர் பட்டயப்படிப்பு முடித்தவர்களாகவும், 4 பேர் முற்றிலும் படிக்காதவர்களாக உள்ளனர். வேட்பாளர்களில் 61 முதல் 80 வயதுடையவர்கள் 53 பேர். அதேபோல் 41 முதல் 60 வயது வரை 165 பேர் உள்ளனர். 25 முதல் 40 வயது வரை 73 பேர் உள்ளனர்.

இந்த தேர்தலில் மொத்தம் 40 பெண்கள் போட்டியிடுகின்றனர்' என்று குறிப்பிட்டிருக்கும் புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பகக் குழு, `கொலை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் உள்ளிட்ட கொடூரமான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என்று பரிந்துரைத்திருக்கிறது.

`ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதெல்லாம் இருக்கட்டும்; அதை விட...'- ஈரான் போரில் ட்ரம்ப்-ன் அடுத்த பிளான்?

ஈரான் போர் ஐந்தாவது வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. இது இந்தப் போரில் சம்பந்தப்பட்டுள்ள ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை மட்டும் பாதிக்கவில்லை. இந்தப் போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, கச்சா எண... மேலும் பார்க்க

பாஜக-வில் இணைந்த பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயாஸ் - மே.வங்க தேர்தலில் போட்டியா?!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலோடு சேர்ந்து மொத்தம் 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் நடக்க இருக்கும் இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இ... மேலும் பார்க்க

ஈரான் போருக்கு ஆகும் செலவுகள்; அரபு நாடுகளின் தலையில் கட்டப்போகிறாரா ட்ரம்ப்?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானைத் தாக்கத் தொடங்கின. முதல் நாளிலேயே, ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இந்தப் போர் இன்னும் முடிந்தபாடில்லை… தொடர்ந்துகொண்டே இர... மேலும் பார்க்க

``தேர்தல் வாக்குறுதி என்று சொல்லாதீர்கள், அவை வெறும் இலவச அறிவிப்புகள்" - சீமான் காட்டம்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று கொளத்தூரில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள சென்றது தொடர்பாக விஜய் மீது 5 பிர... மேலும் பார்க்க

விஜய் மீது வழக்கு: "எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முடக்க நினைத்த அதே பாணி..." - ஆதவ் அர்ஜுனா

சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு பரபரப்பாகி வருகிறது. வேட்பாளர் மனுத்தாக்கல் செய்து, தொகுதிக்குச் சென்று பிரசாரத்தையும் வேட்பாளர்கள் தொடங்கிவிட்டனர். த.வெ.க சார்பில் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக த... மேலும் பார்க்க