செய்திகள் :

`ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதெல்லாம் இருக்கட்டும்; அதை விட...'- ஈரான் போரில் ட்ரம்ப்-ன் அடுத்த பிளான்?

post image

ஈரான் போர் ஐந்தாவது வாரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இது இந்தப் போரில் சம்பந்தப்பட்டுள்ள ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை மட்டும் பாதிக்கவில்லை.

இந்தப் போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு என உலக நாடுகள் அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தப் போரை நிறுத்த தயாராக இருப்பதாக ‘The Wall Street Journal’ நாளிதழுக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி

அந்தத் தகவலின் படி, ட்ரம்ப் அவருடைய அதிகாரிகளிடம் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வைக்கும் கடினமான பணியைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு வர்த்தகம் நடந்து வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதில் இப்போது அழுத்தம் கொடுத்தால், இந்தப் போர் இன்னும் 4 – 6 வாரங்களைத் தாண்டியும் நடக்கும் என்று ட்ரம்ப் கருதுகிறார்.

ட்ரம்ப் திட்டம்

ட்ரம்பின் திட்டமே இந்தப் போரை 4 – 6 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்பது. ஒருவேளை, இப்போது ஹார்முஸ் ஜலசந்தி மீது கவனம் செலுத்தினால், இந்தப் போர் இன்னும் நீடிக்கலாம் என்று ட்ரம்ப் நினைக்கிறார்.

இப்போதைக்கு ட்ரம்பின் திட்டம் – ஈரானின் கடற்படை, ஏவுகணைகளை பலவீனமடைய செய்வது ஆகும். அதன் பின், தாக்குதலைக் குறைத்து, பேச்சுவார்த்தை மூலம் பழையபடி, அனைத்து வர்த்தகங்களையும் தொடங்குவதாகும்.

ஒருவேளை, இது நடக்கவில்லை என்றால், ஐரோப்ப நாடுகள், வளைகுடா நாடுகள் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வைப்பதாகும்.

தமிழ்குமரன் காங்கிரஸில் சேர்ந்தது முதல் பாமக-விலிருந்து நீக்கப்பட்டது வரை! - நடந்தது என்ன?

குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்னையால் இரண்டாகப் பிளவுபட்ட பாமக-வில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. அன்புமணி, ராமதாஸ், ஜி.கே.மணிஅதே நேரம், ட... மேலும் பார்க்க

பாஜக-வில் இணைந்த பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயாஸ் - மே.வங்க தேர்தலில் போட்டியா?!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலோடு சேர்ந்து மொத்தம் 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் நடக்க இருக்கும் இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இ... மேலும் பார்க்க

ஈரான் போருக்கு ஆகும் செலவுகள்; அரபு நாடுகளின் தலையில் கட்டப்போகிறாரா ட்ரம்ப்?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானைத் தாக்கத் தொடங்கின. முதல் நாளிலேயே, ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இந்தப் போர் இன்னும் முடிந்தபாடில்லை… தொடர்ந்துகொண்டே இர... மேலும் பார்க்க

``தேர்தல் வாக்குறுதி என்று சொல்லாதீர்கள், அவை வெறும் இலவச அறிவிப்புகள்" - சீமான் காட்டம்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று கொளத்தூரில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள சென்றது தொடர்பாக விஜய் மீது 5 பிர... மேலும் பார்க்க

புதுச்சேரி: 291 வேட்பாளர்களில் 66 பேர் மீது கிரிமினல், பாலியல் வழக்குகள்! -அதிர வைக்கும் ரிப்போர்ட்

புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வேட்பாளர்களின் சொத்து மற்றும் குற்ற வழக்குகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் புதுச்... மேலும் பார்க்க

விஜய் மீது வழக்கு: "எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முடக்க நினைத்த அதே பாணி..." - ஆதவ் அர்ஜுனா

சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு பரபரப்பாகி வருகிறது. வேட்பாளர் மனுத்தாக்கல் செய்து, தொகுதிக்குச் சென்று பிரசாரத்தையும் வேட்பாளர்கள் தொடங்கிவிட்டனர். த.வெ.க சார்பில் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக த... மேலும் பார்க்க