செய்திகள் :

புத்தாண்டு தினத்திலிருந்து முட்டாள்கள் தினமாக மாறிய சுவாரஸ்ய வரலாறு!

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

1700 வருடம் முதல், ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி உலகமெங்கும் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப் படுகிறது.  ஏன் ஏப்ரல் முதல் நாள் முட்டாள் தினம் எனப்படுகிறது. இதற்கு சுவையான வரலாறு உண்டு. நாம் இப்போது உபயோகிக்கும் நாள்காட்டியின் பெயர் “கிரிகோரியன் காலண்டர்”.  இதனை அறிமுகப்படுத்தியவர் போப் கிரிகெரி. இதனை அறிமுகப்படுத்திய வருடம் 1582.  இந்த நாள் காட்டியின் படி ஜனவரி முதல் தேதி புது வருடத்தின் முதல் நாளாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னால் ஏப்ரல் ஒன்றாம் தேதி புது வருட முதல் நாளாக அனுசரிக்கப்பட்டு வந்தது.

தகவல் தொழில் நுட்ப உபகரணங்கள் இல்லாத அந்த காலத்தில், இந்த மாற்றம் உலகம் முழுவதும் பரவ நிறைய நாட்கள் பிடித்தது. பரவிய சில இடங்களில் இந்த மாற்றத்தை ஒத்துக் கொள்ள மறுத்து சில நாடுகள் ஏப்ரல் ஒன்றாம் தேதியை புது வருடத்தின் முதல் நாளாகக் கொண்டாடி வந்தனர். மாற்றத்தை ஏற்காமல் ஏப்ரல் ஒன்றாம் தேதியை புது வருட முதல் நாளாகக் கொண்டாடி வந்தவர்களை, மாற்றத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஏப்ரல் முட்டாள்கள் என்று கூற ஆரம்பித்தனர்.

உலகில் எல்லா நாடுகளும், ஜனவரி ஒன்றாம் தேதியை வருடத்தின் முதல் நாள் என்று ஒத்துக் கொண்டப் பிறகு, ஏப்ரல் ஒன்றாம் தேதி முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. 1700ஆம் வருடம் இது உலகெங்கும் எல்லா நாடுகளுக்கும் பரவியது.

எப்ரல் ஒன்றாம் தேதி மனதைப் புண்படுத்தாத குறும்புத் தனமான சேஷ்டைகள், யதார்த்தமான நகைச்சுவை, நையாண்டி என்று ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவர். இதில் மாட்டிக் கொண்டவரை ஏப்ரல் முட்டாள்கள் என்று குறிப்பிடுவர். ஆனால் இந்த சேஷ்டைகளை மதியம் வரை மட்டுமே செய்ய வேண்டும். மதியத்திற்கு மேல் இதில் ஈடுபடுபவர்களை மற்றவர்கள் ஏப்ரல் முட்டாள் என்று அழைப்பர்.

பத்திரிகை நிறுவனங்கள், தொலைக் காட்சி மற்றும் வானொலி நிலையங்கள், ஏப்ரல் ஒன்றாம் தேதி குறும்புகள் செய்து மக்களை ஏமாற்றி இருக்கின்றன. மாதிரிக்கு ஒரு சிலவற்றைக் கூறுகிறேன்.

1957ஆம் வருடம், ஏப்ரல் ஒன்றாம் தேதி, பிபிசி தொலைக் காட்சி, நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பு செய்தது. இத்தாலி எல்லையின் அருகிலுள்ள ஸ்விஸ் கிராமம் ஒன்றில் “ஸ்பகாட்டி” என்ற உணவுப் பொருளை மரத்திலிருந்து அறுவடை செய்து, ஒரு குடும்பம் அமர்ந்து சாப்பிடுவதாகக் காட்டியது. கோதுமை கொண்டு தயாரிக்கப்படும் இந்த உணவு பற்றி அப்போது பிரிட்டன் மக்கள் அறிந்திருக்கவில்லை. இந்த மரத்தை எங்களுடைய வீட்டுத் தோட்டத்தில் எப்படி வளர்ப்பது என்று விளக்கம் கேட்டு பிபிசிக்கு பார்வையாளர்களிடமிருந்து அழைப்புகள் வந்த வண்ணமிருந்தன.

1998ஆம் வருடம், ஏப்ரல் முதல் நாள், அமெரிக்காவில் “பர்கர் கிங்க்” என்ற உணவு தயாரிக்கும் நிறுவனம்  ஒரு அறிவிப்பை வெளியிட்டது. “பர்கர் கிங்க்” சிற்றுண்டி சாலைகளில் “இடது கை ஹாம்பர்கர்” செய்யப்படுவதாகவும், இது இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு உண்பதற்கு வசதியாக இருக்கும் என்றும் அறிவித்தது. இது முட்டாள் தினக் குறும்பு என்று உணராமல் இடது கைப் பழக்கம் உள்ளவர்களில் பலர் அருகிலுள்ள “பர்கர் கிங்க்” சிற்றுண்டி சாலைக்கு விரைந்தனர்.

2008ஆம் ஆண்டு முட்டாள்கள் தினத்தன்று, “பறக்கும் பெங்கிவின்” இருப்பதாக பிபிசி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பியது. இது குறும்புத் தனமான செய்தி என்று உணராமல் “டெய்லி டெலிகிராப்”, “டெய்லி மிர்ரர்” என்ற நாளேடுகள் “முக்கியமான செய்தி” என்று முதல் பக்கத்தில் வெளியிட்டன.

2000 ஆண்டிலிருந்து எல்லா வருடமும், ஏப்ரல் 1ஆம் தேதி கூகுள் ஏதாவது ஒன்றை அறிவித்து, வாடிக்கையாளரை அந்த சேவைக்கு ஒரு தொடர்பை அழுத்தச் சொல்லும். அதை அழுத்தினால், “ஏப்ரல் முட்டாள்’ என்ற செய்தி வரும். கூகுள் இந்த தமாஷை 2019 வரை செய்து வந்தது. கோவிட் தொற்றுக்குப் பின் இந்த தமாஷ் நிறுத்தப்பட்டது.

2004 ஆம் வருடம், ஏப்ரல் ஒன்றாம் தேதி, கூகுள் சந்திரனில் ஒரு ஆராய்ச்சி மையம் தொடங்கப் போவதாகவும், அங்கு வேலை செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தினர். அந்த ஆராய்ச்சி நிறுவனத்திற்காக, கோபர்னிகஸ் என்ற மென்பொருளை வடிவமைத்துள்ளதாகவும் கூறினர். இது ஏப்ரல் முட்டாள் அறிவிப்பு.

இத்துடன் கூகுள் அறிவித்த மற்றொரு அறிவிப்பு, மின்னஞ்சல் சேவையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இன்றுதான் கூகுள் ஜிமெயில் சேவை அறிவித்தது.

மக்கள் இந்த அறிவிப்பையும் ஏப்ரல் முட்டாள் ஆக்குவதற்கான முயற்சி என்று நினைத்தார்கள். கூகுள் இந்த ஜிமெயில் சேவை இலவச சேவை, மெயில் சேமித்து வைக்க பயனாளிகளுக்கு 1கிகா பைட் மெமரி (1000 மெகா பைட்) மற்றும் மெயிலைத் தொகுத்து வழங்குதல், நாள் வாரியாக மெயிலை வரிசைப்படுத்துதல் என்று பல வசதிகளுடன் அளிப்பதாக அறிவித்தது. தற்போது, உலகெங்கும் ஜிமெயில் உபயோகிப்பவர் எண்ணிக்கை சுமார் 200 கோடி. ஒரு நாளைக்கு சுமார் 36160 கோடி மெயில்கள் அனுப்பப்படுகின்றன அல்லது பெறப்படுகின்றன.

ஏப்ரல் முட்டாள் நாளை நினைக்கும் போது, தரமான மின்னஞ்சல் சேவை வழங்கிய கூகுளை நினைவு கூறுங்கள்.

வாழ்க்கையை ரசிக்க யதார்த்தமான நகைச்சுவை, சிறு சிறு குறும்புகள் தேவை. அந்த வகையில் ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினம் வரவேற்கத்தக்கது.

-கே.என்.சுவாமிநாதன், சென்னை

தேர்தல்

பொன்னியின் செல்வனும் நானும்! - பயணக் குறிப்பு -1

வந்தியத்தேவனைப் போல மகாபலிபுரத்தில் இருந்து தான் நானும், என் கணவர் மற்றும் தோழியுடன் அதிகாலையில் என் பயணத்தை தொடங்கினேன். என்ன, என்னிடம் ஆதித்த கரிகாலன் தன் தந்தை சுந்தர சோழருக்கு எழுதிய ஓலை இல்லை அவ்... மேலும் பார்க்க

கலையாத கனவுலகம்: டூரிங் டாக்கீஸ் முதல் மல்டிபிளக்ஸ் வரை!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அகல் விளக்கும் அந்த ஒற்றைப் பென்சிலும்! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஹார்மோன்களும் மகிழ்ச்சியும்: உள்ளத்தின் வேதியியல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இலக்கியக் கடலில் ஒரு முத்து: கலைமகள் 95வது ஆண்டு சிறப்பு மலர் மதிப்பாய்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

எங்க அப்பாரு! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க