செய்திகள் :

`ஹார்முஸ் அமெரிக்காவின் பிராந்தியமா?' - ட்ரம்ப் புதிய அதிரடி பேச்சு

post image

இதுவரை ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறேன் என்றுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்தார்.

ஆனால், தற்போது அமெரிக்காவின் பிராந்தியமாகவே ஹார்முஸ் நீர்ச்சந்தி ஆகிவிட்டது என்று பேசியிருக்கிறார்.

நேற்று (ஆகஸ்ட் 21) அமெரிக்காவில் நடந்த நிகழ்வு ஒன்றில், “ஈரான் அணு ஆயுதத்தைப் பெற நாம் அனுமதிக்கக் கூடாது.

ஈரான் அணு ஆயுதம் ஏந்துவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மீறினால் மிக மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

ஹார்முஸ் நீர்ச்சந்தி
ஹார்முஸ் நீர்ச்சந்தி

அமெரிக்கா களமிறங்கி அவர்களைத் தடுத்து நிறுத்தினோம். அவர்கள் இனி ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறவே முடியாது.

ஈரான் ஒப்பந்தம் செய்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறது. தெஹ்ரானுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதில் வாஷிங்டன் (அமெரிக்கா) எந்த அவசரமும் காட்டவில்லை.

அவர்கள் எப்படியாவது ஒப்பந்தம் செய்துகொள்ளத் துடிக்கிறார்கள், ஆனால் நமக்கு [ஒப்பந்தம்] வேண்டுமா என்பதே நமக்குத் தெரியவில்லை.

ஏனென்றால், ஹார்முஸ் நீர்ச்சந்தியை இப்போது நான் அமெரிக்காவின் சொந்தப் பகுதியாகவே பார்க்கிறேன்... அது அமெரிக்காவின் பிராந்தியம்" என்று பேசியுள்ளார்.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க