செய்திகள் :

`ஹெராயின், மெத்தம்பெட்டமைன் கடத்திய கடத்தல் மன்னன் இந்தியாவுக்கு நாடு கடத்தல்' - அமித் ஷா பெருமிதம்

post image

துருக்கியில் தலைமறைவாக இருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் நவ்பிரீத் சிங்கை கைது செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"துருக்கியில் தலைமறைவாக இருந்த பயங்கர போதைப்பொருள் கடத்தல் மன்னன் நவ்பிரீத் சிங்கை வெற்றிகரமாக நாடு கடத்தி அழைத்து வந்ததன் மூலம், நரேந்திர மோடி அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளது.

அமித்ஷா பதிவு
அமித்ஷா பதிவு

'நவாப் விர்க்' என்ற போலி அடையாளத்தில் துருக்கியக் குடியுரிமையைப் பெற்றிருந்த அவன், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஹெராயின் மற்றும் மெத்தம்பெட்டமைன் போன்ற கொடிய போதைப்பொருட்களைத் தொடர்ந்து கடத்தி வந்தான்.

நமது புலனாய்வு அமைப்புகள் அவனைப் பின்தொடர்ந்து, அவனது போலி முகமூடிகளை ஒவ்வொன்றாகக் கிழித்தெறிந்து, அவனது உண்மையான அடையாளத்தை தெரியப்படுத்தி, அவனை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளைச் சட்டப்பூர்வமாக உறுதிசெய்தன.

இன்று அவன் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்த மகத்தான வெற்றிக்குக் காரணமான அனைத்துப் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு முகமைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

டிசம்பர் 2029-க்குள் நாட்டில் உள்ள அனைத்துப் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களையும் வேரோடு அழிப்பதில் மோடி அரசு முழு வீச்சில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது". என பதிவிட்டுள்ளார்.

'அனுமதியின்றி அதிகாலை காட்சிகள்; விதிகளை மீறும் தியேட்டர்கள்!' - கண்டுகொள்ளாத தவெக அரசு?

தமிழகத்தில் புதிய படம் வெளியான முதல் ஒரு வாரத்திற்கும் அரசு விடுமுறை நாட்களிலும் திரையரங்குகளில் 9 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குக... மேலும் பார்க்க

"EVM வேண்டாம்; வாக்குச்சீட்டு முறை வேண்டும்" - காங்கிரஸ், தவெகவிற்கு கண்டனங்கள் - திமுக தீர்மானங்கள்

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள்...> எஸ்.ஐ.ஆர் முழுமையாக ர... மேலும் பார்க்க

திருச்சி: "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்!" - தொல்.திருமாவளவன் கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவு த... மேலும் பார்க்க

நவநீதம் பிள்ளை: `பாரதி கனவு கண்ட புதுமைப்பெண்ணுக்கு நோபல் விருது!' - பழ. நெடுமாறன் புகழாரம்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த பெண்ணான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்த் தேசியவாதி பழ நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தி! `நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட ... மேலும் பார்க்க

அரிசி விலை அதிகரிக்க இதுதான் காரணம் - பின்னணி பகிரும் ரைஸ்மில் உரிமையாளர்!

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக அரிசியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.55 -க்கு விற்கப்பட்டது இன்று ரூ.75 ஆகவும், 26 கிலோ மூட்டை ரூ. 700 வரை விலை உயர்ந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்ற... மேலும் பார்க்க

புதுச்சேரி: "ஏரியில் வீட்டைக் கட்டிவிட்டு..." - மக்களின் மழைப் புகாருக்குச் சீறிய MLA ஜோஸ் சார்லஸ்

தென்கிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதால் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டிருக்கிறது. அதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. அதன்படி நேற்... மேலும் பார்க்க