செய்திகள் :

`ஹேமா கமிட்டியிடம் அளித்த வாக்குமூலம்; வழக்கு எடுக்க கூடாது' - நடிகை மாலா பார்வதி கூறும் காரணமென்ன?

post image

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் கொச்சியில் வைத்து காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கு கோர்ட்டில் விசாரணையில் இருக்கும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் உள்ளிட்ட அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையாள சினிமாத் துறையின் பெண்கள் அமைப்பான wcc முதல்வர் பினராயி விஜயனுக்கு மனு அளித்திருந்தனர். அதைத் தொடர்ந்து சினிமாத் துறையில் பணிபுரியும் பெண்களின் நிலை குறித்து ஆய்வுசெய்ய 2018-ம் ஆண்டு மே மாதம் நீதிபதி ஹேமா தலைமையில், நடிகை சாரதா, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வல்சலகுமாரி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி நீதிபதி ஹேமா கமிட்டி தனது அறிக்கையை கேரள முதல்வரிடம் சமர்ப்பித்தது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் ஹேமா கமிட்டி அறிக்கையின் ஒரு பகுதி வெளியானது. ஹேமா கமிட்டி அறிக்க வெளியான பிறகு நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து மீடியாக்களிடம் பேசினர். இது சம்பந்தமாக நடிகர்கள் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த விசாரணைக் குழுவினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தான் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் கூடாது என நடிகை மாலா பார்வதி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஹேமா கமிட்டி அறிக்கை

இது குறித்து நடிகை மாலா பார்வதி கூறுகையில், "ஹேமா கமிட்டியில் நாங்கள் வாக்குமூலம் அளிக்கும் போது, அதை வழக்குக்கான புகாராக அளிக்கவில்லை. பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக வெளிப்படையாக அனைத்தையும் கூறினோம். வழக்கு எடுக்க வேண்டும் என்பதற்காக நான் வாக்குமூலம் அளிக்கவில்லை. நடந்த விஷயங்களைத் தான் கூறினோம். எதிர்காலத்தில் சினிமாவில் நடிக்கும் போது அநாகரிகமான தொடுதல் உள்ளிட்டவை ஏற்படுவதை தடுக்கும் விதமான சட்டங்கள் வரவேண்டும் என்பதற்காகத்தான் அதை நாங்கள் கூறினோம். ஹேமா கமிட்டியிடம் வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் குழு என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். சம்பவம் நடந்தது உண்மைதான், ஆனால் அதை புகாராகக்கொண்டு வழக்காக முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை என விசாரணை குழுவிடம் தெரிவித்திருந்தேன். ஆனால், நான் கொடுத்த வாக்குமூலத்தை வைத்துக்கொண்டு எங்களுக்கு துணையாக நிற்கும் சிலரை அழைத்து விசாரணை செய்திருக்கிறார்கள்.

நடிகை மாலா பார்வதி

எனக்கு புகார் அளிக்கும் எண்ணமோ, வழக்குப்பதிவு செய்து கேஸ் நடத்தும் எண்ணமோ இல்லை எனக் கூறிய பிறகும் அது பற்றி விசாரணை நடத்தி சிலரை தொந்தரவு செய்வது தெரிய வந்தது. எனவே அதை நிறுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்துள்ளேன். ஹேமா கமிட்டி என்னிடம் வாக்குமூலம் பெறும்போது இது ஒரு ஆய்வு தான். உங்கள் அனுபவங்களை வெளிப்படையாக கூறுங்கள். அதனால் தனிப்பட்ட முறையில் யாருக்கும் பிரச்னை ஏற்படாது. யாருடைய பெயரையும் குறிப்பிடமாட்டோம் எனக் கூறியது. அதனால் நான் வாக்குமூலம் கொடுத்திருந்தேன், இது புகார் இல்லை எனவும், வழக்காக கொண்டு செல்ல வேண்டாம் எனவும் நான் விசாரணை கமிட்டியிடம் தெரிவித்திருந்தேன். அதன் பிறகும் அவர்கள் விசாரணையை தொடர்கிறார்கள். அது என்னை தனிப்பட்ட முறையில் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கி உள்ளது. எனவே தான் எனது வாக்குமூலத்தை வழக்காக விசாரணை நடத்தக் கூடாது என நான் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்துள்ளேன்" என்றார். மாலா பார்வதியின் நிலைபாட்டுக்கு மலையாள சினிமாவின் பெண்கள் அமைப்பான wcc எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Kalidas Jayaram: குருவாயூரில் திருமணம்; குவிந்த கூட்டம் - காளிதாஸ் பகிர்ந்த தகவல்

காளிதாஸ் ஜெயராம் - தாரிணி கலிங்கராயர் இருவருக்கும் இன்று (டிச 9) காலை குருவாயூர் கோயிலில் திருமணம் நடைபெற்றிருந்தது.இத்திருமணத்தைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்ப... மேலும் பார்க்க

kalidas: குருவாயூரில் கோலாகலமாக நடந்த காளிதாஸ் ஜெயராம் - தாரிணி திருமணம்! - குவியும் வாழ்த்துகள்

காளிதாஸ் ஜெயராம் - தாரிணி இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது.நடிகர் ஜெயராம் அவர்களின் மகனான காளிதாஸ் ஜெயராம் , 'தமிழில் மீன் குழம்பும் மண் பானையும்', 'பூமரம்', 'ஒரு பக்க கதை', 'பாவகதைகள்' ... மேலும் பார்க்க

Kishkindha Kandam: என்னுடைய ஃபேவரைட் மணி ரத்னம் சார்தான்! - `கிஷ்கிந்தா காண்டம்' இயக்குநர் பேட்டி

இந்தாண்டு மலையாளத்தில் வெளியான சிறந்த த்ரில்லர் படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது `கிஷ்கிந்தா காண்டம்'.Kishkindha Kaandam movieகோலிவுட், டோலிவுட் என அத்தனை இடங்களிலும் கவனம் பெற்றி... மேலும் பார்க்க

Allu Arjun: "பகத் பாசில் என்னுடன் புரோமோஷனுக்கு வராதது வருத்தம்தான்; ஆனால்..." - அல்லு அர்ஜூன்

̀புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 5-ம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.இதையொட்டி இப்படத்திற்கான புரோமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர் நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர். ஆந... மேலும் பார்க்க

Sookshmadarshini Review: துப்பறியும் நஸ்ரியா;`சேட்டை சேட்டன்' பேசில் ஜோசப் - த்ரில்லராக ஈர்க்கிறதா?

சுக்ஷம தர்ஷினி என்றால் மைக்ரோஸ்கோப் என மலையாளத்தில் பொருள்.தன் கணவர், குழந்தை என சந்தோஷமான வாழ்க்கையில் இருக்கும் ப்ரியதர்ஷினிக்கு (நஸ்ரியா) வேலையில்லாமல் வீட்டிலேயே அதிக நேரம் செலவழிப்பது ஒரு வெறுமைய... மேலும் பார்க்க

Kerala: ``நான் தற்கொலை செய்தால் அரசுதான் பொறுப்பு'' - பாலியல் புகாரை வாபஸ் வாங்கிய நடிகை!

சமீபத்தில் மலையாள திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவத்தில் ஒன்று ஹேமா கமிட்டி அறிக்கை. 'மலையாளத் திரைத் துறையில் பாலியல் வன்கொடுமை' தொடர்பான புகார்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்த... மேலும் பார்க்க