செய்திகள் :

₹ 1 -க்கு இவ்வளவு மதிப்பா? இந்திய ரூபாய் வைத்திருந்தால் இந்த நாடுகளில் நீங்கள் பணக்காரர் தான்!

post image

சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிடும் போது பணம் குறித்த கவலைகள் தான் நம் நினைவிற்கு உடனே வரும். நம் ஊரில் அதன் மதிப்பு வேறு, வெளிநாடுகளில் அதன் மதிப்பு வேறு.

பொதுவாக சர்வதேச பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றாலே, தங்குவதற்கு ஹோட்டல் புக் செய்வது, விசா அனுமதி வாங்குவது, ஷாப்பிங் செலவுகள் என பயண திட்டமிடலுக்கு காரணமான ரூபாயின் மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

டாலருக்கு நிகரான மதிப்பு இந்திய ரூபாய்க்கு இல்லை என்றாலும், பல நாடுகளின் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?

சில குறிப்பிட்ட நாடுகளில் இந்திய ரூபாய் மதிப்பு உங்களை பணக்காரர்களாக உணர வைக்கும். அங்கு 1 லட்சம் ரூபாய் கூட, உங்களை உள்ளூர் கோடீஸ்வரனாக்கும். இந்திய ரூபாய்க்கு அதிக மதிப்பு கொடுக்கும் நாடுகள் குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.

வியட்நாம்

₹1 = 293.40 வியட்நாமிய டாங்

தெற்காசியாவில் அமைந்துள்ள, வியட்நாமிற்கு பயணம் செய்வது என்பது ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுக்கும்.

1 லட்சம் இந்திய ரூபாயை வியட்நாமிற்கு எடுத்துக் சென்றால்,அது சுமார் 29,321,600 வியட்நாமிய டாங்காக மாற்றப்படும்.

ஈரான்

₹1 = 484.03 ஈரானிய ரியால்

நீங்கள் 1 லட்சம் இந்திய ரூபாயை ஈரானுக்கு எடுத்துக் சென்றால்,அது சுமார் 4,84,02,821 ஈரானிய ரியாலாக மாற்றப்படும். அங்கு ராஜ வாழ்க்கை வாழலாம்.

இந்தோனேசியா

₹1 = 188.33 இந்தோனேசிய ரூபியா

உலகின் மிகப்பெரிய தீவுகளை கொண்ட இந்தோனேசியாவுக்கு பயணம் மேற்கொண்டால் பல்வேறு மாறுபட்ட சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்கலாம்.

இந்தோனேசியா

கண்கவர் விலங்கினங்களைப் பார்க்கலாம். பல்வேறு கலாச்சாரங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

1 லட்சம் இந்திய ரூபாயை இந்தோனேசியாவுக்கு எடுத்துச் சென்றால், அது சுமார் 188.884.000 இந்தோனேசிய ரூபியா மாற்றப்படும்.

கம்போடியா

₹1 = 46.12 கம்போடிய ரியல்

கம்போடியாவுக்கு செல்வதால் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான இடங்களை கண்டு ரசிக்கலாம்.

ஆசியாவில் பயணம் செய்ய மலிவான இடங்களில் இது முக்கியமானது. இங்கு பத்தாயிரம் ரூபாய் எடுத்துச் சென்றால், அது 455,645 கம்போடிய ரியலாக மாற்றப்படும்.

கம்போடியா

சிலி

₹1 = 10.74  சிலி பேசோ

அற்புதமான நிலப்பரப்புகளைக் கொண்ட நாடு! மலையின் மீது அமைந்திருக்கும் வண்ணமயமான வீடுகள் காண்போரை மதி மயக்கும்.

இங்கு பத்தாயிரம் ரூபாய் எடுத்துக் சென்றால், அது 1,07,447 சிலி பேசோவாக மாற்றப்படும்.

கொலம்பியா

₹1 = 47.23 கொலம்பிய பேசோ

கொலம்பியாவில் பல்வேறு கடற்கரைகள், மலைத்தொடர்கள், வரலாறு இடங்களை பார்த்து மெய் மறந்துபோவீர்கள்.

இங்கு பத்தாயிரம் ரூபாய் எடுத்துச் சென்றால், அது 4,72,339 கொலம்பிய பேசோவாக மாற்றப்படும்.

கினியா

₹1 = 99.57 கினியன் பிராங்க்

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு அற்புதமான நாடான கினியா, பணக்கார மற்றும் மாறுபட்ட சுற்றுலாத் தலங்களை கொண்டது.

கினியாவுக்கு 1000 ரூபாயை எடுத்துச் சென்றால், அது சுமார் 99,567 கினியன் பிராங்க்காக மாற்றப்படும். அது உங்களை அங்கு கோடீஸ்வரனாக உணர வைக்கும்.

அப்புறம் என்ன இவ்வளவு மலிவான விலையில் வெளிநாடுகளை சுற்றிப்பார்க்கலாம் என்றால் நீங்கள் எந்த நாட்டிற்கு செல்வீர்கள்? கமெண்டில் சொல்லுங்க மக்களே!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

சென்னையில் இப்படி ஓர் இடமா! - Weekend- ஐ என்ஜாய் செய்ய சூப்பர் spot!

சென்னையின் அடையாறில் உள்ள தியாசாபிகல் சொசைட்டி, நகரத்தின் போக்குவரத்து, சலசலப்பு மற்றும் பரபரப்பான தெருக்களில் இருந்து சற்று விலகி செல்ல விரும்புவோருக்கு ஒரு சிறந்த இடமாக இருக்கிறது. இது 1875 ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் `குணா குகை' தெரியும்; இது என்ன `குக்கல் குகை' - மிஸ் செய்யக்கூடாத சூப்பர் ஸ்பாட்!

கொடைக்கானலில் பிரபலமாக இருக்கும் குணா குகை பற்றி தான் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் இங்கு கொடைக்கானலில் இருந்து 40 கி.மீ தூரத்தில் இருக்கும் குக்கல் குகைகள் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். தெ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 3 விதமாக காட்சியளிக்கும் ‎சோட்டானிக்கரை ‎பகவதி அம்மன்! - சிலிர்ப்பனுபவம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Socotra: 825 வகை தாவரங்கள்; 700 வகை உயிரினங்கள்; வேற்றுகிரகம் போல காட்சியளிக்கும் பாலைவன தீவு!

சகோத்ரா, ஏமனில் உள்ள ஒரு பாலைவனத் தீவு. உலக அளவில் இன்ஃப்ளூயன்சர்களாலும் சுற்றுலா செல்லும் பணக்காரர்களாலும் பெரிய அளவில் கவனிக்கப்படாத இந்த தீவு, சர்வதேச சுற்றுலா செல்லும் வாய்ப்புள்ள அனைவரும் சென்று ... மேலும் பார்க்க

`இருக்கு ஆனா இல்ல...' - ஐ.நா-வால் `நாடாக' அங்கீகரிக்கப்படாத நாடுகள் பற்றி தெரியுமா?!

எல்லைகள், பாஸ்போர்ட்டுகள், தேசிய கீதங்கள் இவை ஒரு நாட்டின் அடையாளங்களாக கருதப்படுகிறது. சில இடங்கள் நாடுகளைப் போலவே செயல்படுகின்றது. ஆனால் அவற்றை உலகின் பிற நாடுகள் நாடுகளாக கருதுவதில்லை. அப்படி நாடுக... மேலும் பார்க்க

இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம் பற்றி தெரியுமா?

மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) கீழ் இயக்கப்படும் இந்தியாவின் முதல் தனியார் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.இந்த ... மேலும் பார்க்க