செய்திகள் :

1.5 டன் எடை, ரூ.5 லட்சம் விலை - அந்தியூர் கோயில் திருவிழாவில் கவனத்தை ஈர்த்த ஜாஃப்ராபாடி எருமை!

post image

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கிறது சிறப்பு வாய்ந்த குருநாத் சுவாமி திருக்கோயில். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தேர் திருவிழாவின் ஒரு பகுதியாக குதிரை உள்ளிட்ட கால்நடை சந்தை நடைபெறுவதும் வழக்கம்.

தேர் திருவிழா

நூற்றாண்டு பாரம்பர்யம் கொண்ட இந்த கால்நடைச் சந்தையில் தமிழ்நாடு மட்டுமன்றி நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான தேர் திருவிழா கடந்த 12- ம் தேதி தொடங்கி 16- ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திருவிழாவில் பங்கேற்றனர். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கால்நடைச் சந்தையில் பிரமாண்டமான ஜாஃப்ராபாடி எருமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இந்த எருமை குறித்து பகிர்ந்த உரிமையாளர் துரை , "‌அசல் ஜாஃப்ராபாடி எருமை ( Jafarabadi) இனத்தைச் சேர்ந்தது. சுமார் 1.5 டன் எடை உள்ளது. மேலும் சில டன் வரை எடை கூடும். 7 அடி உயரம். மேலும் 9 அடி நீளம் கொண்ட இந்த பிரமாண்ட எருமையின் வயது வெறும் மூன்றரை ஆண்டுகள் மட்டுமே. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த வகை எருமைகள், அவற்றின் பிரமாண்டமான உடல் அமைப்புக்காகவே தனி கவனம் பெறுகின்றன.

ஜாஃப்ராபாடி எருமை

கிட்டத்தட்ட குட்டி யானையைப் போல பிரமாண்டமாக காட்சியளிக்கும் இந்த எருமை, பழகும் குணத்தில் குழந்தையைப் போல அமைதியாக காணப்படும். அதேவேளையில், எருமை இனங்களிலேயே அதிக அளவில் பால் கொடுக்கும் தன்மை கொண்ட இனங்களில் இதுவும் ஒன்று. திருவிழாவிற்கு வருகைத் தந்த பக்தர்கள், சாமி தரிசனத்துடன் இந்த பிரமாண்ட எருமையையும் ஆர்வத்துடன் பார்த்து, அதன் அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்துச் சென்றனர். 5 லட்சம் ரூபாய்க்கு கேரளாவிற்கு விற்பனை செய்யப்பட்டது" என்றார்.

சாதாரணமாக தொடங்கிய ஒரு நாள் வேலை… முடிவில் கிடைத்தது ₹98 கோடி புதையல் - நடந்தது என்ன?

பெல்ஜியத்தில் பழைய கட்டடம் ஒன்றின் அருகே கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிக்காக நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த 18 வயது இளைஞருக்கு, சுமார் ₹98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற... மேலும் பார்க்க

லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான விருது; ராமநாதபுரம் நகராட்சி சர்ச்சை!

நாட்டின் 80 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்குவத... மேலும் பார்க்க

தி.,காங்கிரஸ் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் துணை சபாநாயகர் - மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக இருந்தபோது துணை சபாநாயகராக பணியாற்றியவர் ஆசிஷ் பானர்ஜி. ராம்பூர்ஹாட்டில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏ-வாக இருந்தவர். கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வ... மேலும் பார்க்க

பட்டம் விடும் திருவிழா: ECR வானில் பிரமாண்ட வர்ணஜாலம் நிகழ்த்தும் ஆயிரக்கணக்கான பட்டங்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கறை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளாகத்தில் பல்வேறு நாட்டு காத்தாடிகளும், நம் இந்திய நாட்டு காத்தாடிகளும், தமிழக கலாசாரத்தை சிறப்பிக்கும் காத்தாடிகளு... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பான் மசாலாவிற்கு விளம்பரம்: நடிகர் ஷாருக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

மகாராஷ்டிராவில் பான் மசாலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகர் ஷாருக் கான் ஆகியோர் விமல் எலைச்சி எனப்படும் ஒருவகை பான் மசாலாவிற்கு தொடர்ந்து விளம்பரம் செய்... மேலும் பார்க்க