செய்திகள் :

”125 நாள் வேலைக்கான சம்பளம் 80 நாட்களாக வரவில்லை” - தீபாவளிக்கு முன்பு வழங்க விவசாயிகள் போராட்டம்

post image

தஞ்சாவூர் மாவட்டம், ஆதனுார் கிராமத்தில், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கரும்புக்கான ஊக்கத்தொகையை தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

விவசாயி மகாலிங்கம் தலைமையிலும், சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் தலைமையில், உழவர்களை வாழ விடு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூரில் விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இதில், பாரபட்சம் காட்டாமல் பதிவு செய்யாத கரும்பு விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகையினை தமிழக அரசு வழங்க வேண்டும், தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டும், 100 நாள் வேலைக்கான கூலியைத் தாமதிக்காமல் வழங்க வேண்டும் எனக் கோஷமிட்டனர்.

பின்னர் விமல்நாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''தமிழக அரசு கரும்புக்கான ஊக்கதொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50 அறிவித்துள்ளது. இந்தத் தொகையானது, பதிவு செய்த கரும்பு விவசாயிகளுக்கு மட்டுமே தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரைக்கப்பட்ட சுமார் 89 லட்சம் டன் கரும்பில், சுமார் 10.20 லட்சம் டன் கரும்பு, பதிவு செய்யாத விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு அரைக்கப்பட்டுள்ளது. இதில் பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

இந்தத் தொகையை தீபாவளிக்கு முன்பு வழங்க வேண்டும். இதே போல் தவெக தேர்தல் வாக்குறுதியில் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500 தருவதாக அறிவித்தார்கள். ஆனால் தற்போது 4,000 மட்டும் தருகின்றனர். தேர்தல் சமயத்தில் சொன்னபடி பாராபட்சம் காட்டாமல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

சுவாமிமலை விமல்நாதன்

இடைத்தரகர்கள், விவசாய சங்கங்களின் தலையீடுகள் இல்லாமல், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கரும்புக்கான ஊக்கத்தொகையை நேரடியாக வரவு வைக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டம் 125 நாளாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் 80 நாட்களாக வேலை செய்ததற்கான சம்பளம் வழங்கப்படவில்லை. தாமதிக்காமல் அந்தச் சம்பளத்தையும் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசியக்கொடி, விவசாய கருவிகள் மற்றும் கரும்பு ஆகியவற்றுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்'' என்றார்.

பூ புத்தரி: பழங்குடிகளின் பாரம்ர்ய முறைப்படி கூடலூரில் தொடங்கிய நெல் அறுவடைத் திருவிழா! | Photos

புது நெல் அறுவடைத் திருவிழா புது நெல் அறுவடைத் திருவிழா புது நெல் அறுவடைத் திருவிழா புது நெல் அறுவடைத் திருவிழா புது நெல் அறுவடைத் திருவிழா புது நெல் அறுவடைத் திருவிழா புது நெல் அறுவடைத் திருவிழா புது... மேலும் பார்க்க

ஈரோடு: 'Beggar Free India'- 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உலக சாதனை விழிப்புணர்வு நிகழ்ச்சி|Photos

ஈரோட்டில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றதுஈரோட்டில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றதுஈரோட்டில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றதுஈரோட்டில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றதுஈரோட்டில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது... மேலும் பார்க்க

`ஏ.சி அறையில் நவீன விவசாயம்; 7 நாள்களில் அறுவடை..!' - மைக்ரோ கிரீன்ஸ் விற்பனையில் அசத்தும் இளைஞர்

துரித உணவுகளின் ஆதிக்கத்தால் ஆரோக்கியத்தைச் தொலைத்துவிட்டு நிற்கும் நகர்ப்புற மக்களுக்கு, 'மைக்ரோ கிரீன்ஸ்' எனப்படும் நுண்கீரைகள் ஒரு வரப்பிரசாதமாகும். ரசாயனக் கலப்பற்ற, சத்துக்கள் நிறைந்த இந்த சூப்பர... மேலும் பார்க்க

`மழையில் நெல் மூட்டைகளை பாதுகாப்பதை விட என்ன வேலை?' - அலட்சிய அதிகாரிகளை கடிந்த அமைச்சர் வினோத்!

டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில், அமைந்துள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் ... மேலும் பார்க்க

பசுமை சந்தை..!

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர... மேலும் பார்க்க