செய்திகள் :

15 ஆண்டுக்கால காத்திருப்பு... ஒரே லாட்டரியில் ரூ.12 கோடி - பஞ்சாப் விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்!

post image

தினமும் உழைப்பு... விவசாயம்... அவ்வப்போது ஒரு லாட்டரி சீட்டு என வாழ்க்கையை நகர்த்திவந்த விவசாயிக்கு, ஒரே நாளில் ரூ.12 கோடி பரிசு கிடைத்திருக்கிறது. 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்கிவந்த அவரது காத்திருப்புக்கு, இந்தத் தீபாவளியில் அதிர்ஷ்டம் கதவைத் திறந்திருக்கிறது!

பஞ்சாப் மாநிலம், தேராபஸ்ஸி அருகே உள்ள ஹுமாயுன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான பல்ஜிந்தர் சிங். விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட இவர், கடந்த 2010-ம் ஆண்டு முதல் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக லாட்டரி வாங்கியும் பெரிய பரிசு எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும், லாட்டரி வாங்குவதை அவர் நிறுத்தவில்லை.

இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பு, ஹண்டேஸ்ரா பகுதியில் உள்ள லாட்டரி விற்பனையாளரிடம் ரூ.500 கொடுத்து ஒரு லாட்டரி சீட்டை வாங்கியிருக்கிறார். அந்தச் சீட்டு அவரது வாழ்க்கையையே மாற்றும் என்று அப்போது அவர் நினைத்திருக்க மாட்டார்.

செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், தான் ரூ.12 கோடி முதல் பரிசை வென்றிருப்பதை அறிந்திருக்கிறார். செய்தி கேட்டதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய பல்ஜிந்தர் சிங், 'இறுதியாக, கடவுள் என் வேண்டுதலுக்குப் பதிலளித்திருக்கிறார்' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான இவர், பரிசுத் தொகையை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. பரிசுத் தொகையைப் பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள நண்பர்களுடன் ஜிராக்பூருக்குச் சென்றிருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தின் 'Dear Diwali Bumper Lottery 2026' குலுக்கலுக்காக 36 லட்சம் சீட்டுகள் அச்சிடப்பட்டிருந்தன. 12 ராசிகளின் பெயர்களில் 12 தொடர்களாக வெளியிடப்பட்ட லாட்டரியில், ரூ.500-க்கு வாங்கிய ஒரு சீட்டு பல்ஜிந்தர் சிங்குக்கு ரூ.12 கோடியைத் தேடித் தந்திருக்கிறது. 15 ஆண்டுகளாகத் தொடர்ந்த அவரது முயற்சிக்கு, இந்தத் தீபாவளி மறக்க முடியாத பரிசை வழங்கியிருக்கிறது!

மும்பை: மனைவியை அமர வைத்து எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டிய பிரிட்டன் இளவரசர்!

பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டனுடன் மும்பை வந்துள்ளார். இளவரசர் வில்லியம், வருடாந்திர சுற்றுச்சூழல் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தன் மனைவியுடன் நேற்று மும்பை வந்தார். ந... மேலும் பார்க்க

லாரான்ஸ் கேங் அச்சுறுத்தல்; கமாண்டோ உதவியுடன் பலப்படுத்தப்பட்ட அமிதாப், சல்மான் பாதுகாப்பு!

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது சமீபத்தில் மும்பையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். ஆனால் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாலிவுட் பி... மேலும் பார்க்க

பைக்கில் சென்று சிங்கத்தை விரட்டிய வனத்துறை ஊழியர்கள் - குஜராத் வன விலங்குகள் சரணாலய வீடியோ வைரல்!

குஜராத் மாநிலம் அம்பார்டி மாவட்டத்தில் தாரி கிர் கிழக்கு பிரிவில் சிங்கம் சரணாலயம் ஒன்று இருக்கிறது. இங்கு பார்வையாளர்கள் மூடப்பட்ட வாகனங்களில் சென்று சிங்கங்களை நேரில் பார்வையிட முடியும். இந்த சிங்கம... மேலும் பார்க்க

பிரேக்அப் செய்த லிவ்-இன் காதலி; வீடியோ கால் செய்து வளர்ப்பு நாய்களை செங்கலால் அடித்து கொன்ற காதலன்

கொல்கத்தாவின் பிஜய்கர் பகுதியில் வசித்து வந்தவர் சஞ்சிப் பட்டாச்சார்யா. அவர் டிஜே பரினோவா என்ற பெண்ணுடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பரினோவ... மேலும் பார்க்க

'ஆன்லைனில் இளம்பெண்; ஆனால் நேரில்...' - கனடாவிலிருந்து வந்த பெண்ணை நேரில் பார்த்து மணக்க மறுத்த நபர்

கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் ஹரியானாவைச் சேர்ந்த ஒரு வாலிபரை டேட்டிங் ஆப் மூலம் காதலித்து வந்தார். ஹரியானாவில் உள்ள பானிபட்டில் வசிக்கும் நிதினுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு டேட்டிங் செயலி மூலம் கனடாவைச் ... மேலும் பார்க்க