செய்திகள் :

"16 வருச உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரம்" - வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா நெகிழ்ச்சி

post image

வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக தவெக நிர்வாகியான சிவாவை நியமித்து நியமன ஆணையையும் வழங்கியிருக்கிறார் முதல்வர் விஜய்.

Siva
Siva

சிவா, தவெகவின் பெரம்பூர் தொகுதி மாவட்டச் செயலாளர். சென்னையிலேயே அதிகமாக பெரம்பூர் தொகுதியில் 43,000 பேரை கட்சி உறுப்பினராகச் சேர்த்ததால் விஜய்யே சிவாவை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார்.

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என விஜய் முடிவெடுத்ததற்கும் அந்தத் தொகுதியின் வலுவான கட்டமைப்பிற்கும் முக்கியக் காரணமாக இருந்தது. வேட்பாளர் அறிவிப்புக் கூட்டத்தின் போதுமே சிவாவை மேடைக்கு அழைத்து, "எனக்காக இவர் தொகுதியை விட்டு கொடுத்திருக்காரு. இவரை நான் பார்த்துக்குறேன். கவலைப்படாதீங்க..." என விஜய் பேசியிருந்தார்.

பிரசாரத்தின்போது தவெகவின் பணிமனைக்கு விஜய் சென்றபோது அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள், தொகுதியில் மக்களின் புகார்களை வாங்க சிவா எடுக்கும் முயற்சிகள் போன்றவற்றால் முதல்வர் விஜய்யின் குட்புக்கில் அவர் இடம்பிடித்திருந்தார்.

முதலமைச்சருடன் சிவா
முதலமைச்சருடன் சிவா

இதைத் தொடர்ந்தே சிவாவுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென முடிவெடுத்து வாரியத் தலைவர் பதவி கொடுக்க முதல்வர் விஜய் முன்வந்திருக்கிறார். அதுவும் இருப்பதிலேயே வலுவான அதிகாரமிக்க வீட்டு வசதி வாரியத் தலைவர் பதவியை சிவாவுக்குக் கொடுத்திருக்கிறார்.

முதல்வரைச் சந்தித்து நியமன ஆணையை வாங்கி வந்த சிவாவிடம் பேசினோம், "இப்போதுதான் தளபதியைச் சந்தித்துவிட்டு வருகிறேன். மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. 'உன்னை இப்படி ஒரு இடத்துல பார்க்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா... நீ மேன்மேலும் நிறைய உயரங்களை எட்டணும்'னு தோளில் தட்டி வாழ்த்தி அந்த நியமன ஆணையை தளபதி கொடுத்தார்.

16 வருடமாக மக்கள் இயக்கத்தில் உழைத்திருக்கிறேன். அந்த உழைப்புக்கு தளபதியே கொடுத்திருக்கும் அங்கீகாரம்தான் இது. முதல்வரின் சொல்படி இன்னும் அக்கறையோடு பொறுப்போடும் மக்களுக்காகப் பணியாற்றுவேன்" என்றார்.

"டாஸ்மாக்கில் பாட்டலுக்கு 10 ரூபாய் வாங்குவது குறைந்துள்ளது" - அமைச்சர் விக்னேஷ் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது இன்... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``தவெக மீது சேறு வாரி இறைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்" - தவெக

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

"முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஒரு வாரமாக கரண்ட் கட்" - கலெக்டரிடம் புகார் அளித்ததும் பரபரத்த அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக 2006 முதல் 2011 வரை இருந்து வந்தவர் ஜான்ஜோசப். சி.பி.எம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். அவ... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபமாக மாறியிருக்கிறது" - பா.ரஞ்சித்

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க

பெயர் மாறிய 'தாயுமானவர்' திட்டம்? 'நான் முதல்வன்', 'விடியல்' வரிசையில் தவெக அரசின் அடுத்த மாற்றம்?

திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட 'நான் முதல்வன்' திட்டத்தை தவெக அரசு 'திறன் தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்தது நினைவிருக்கலாம். அதேபோல மகளிர் இலவசமாகப் பயணம்... மேலும் பார்க்க