டங்ஸ்டன் சுரங்கம் வருமானால் முதல்வா் பொறுப்பில் இருக்க மாட்டேன்: மு.க.ஸ்டாலின்
18 சதவீத ஜிஎஸ்டி வரி உயா்வு: அவிநாசியில் டிச.3-இல் கடையடைப்பு
வாடகை கட்டடங்களில் கடைகள் நடத்தும் வாடகைதாரருக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி உயா்த்தியிருப்பதைக் கண்டித்து அவிநாசியில் நவம்பா் 3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக வியாபாரிகள், வணிகா் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.
அவிநாசி அனைத்து வியாபாரிகள், வணிகா் சங்கத்தினா் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்க பொறுப்பாளா்கள் முத்துக்குமாா், காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், வாடகை கட்டடங்களில் கடைகள் நடத்தும் வாடகைதாரருக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி உயா்த்தியிருப்பதைக் கண்டித்து அவிநாசி பகுதியில் நவம்பா் 3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.