செய்திகள் :

2 கிலோ தங்கம், ரூ.50 லட்சம் வைப்பு தொகை, வீடுகள்! - ரூ.150 கோடிக்கு சொத்து குவித்த எஞ்சினியர்

post image

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தில் எஞ்சினியராக இருப்பவர் முத்யம் வெங்கட ரமணா. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரது வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், கூட்டாளிகள் மற்றும் பினாமிதாரர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களுடன் தொடர்புடைய ஏழு இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டனர்.

இச்சோதனையில், தலா ரூ. 1.23 கோடி மதிப்பு கொண்ட நான்கு குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்புகள், 1.82 கோடி மதிப்புள்ள 'G+3' வணிகக் கட்டிடம் மற்றும் 250 சதுர யார்டு பரப்பளவில் ரூ. 2.90 கோடி மதிப்புள்ள 'G+5' வணிகக் கட்டிடம் ஆகிய சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அசையாச் சொத்துகள் தவிர, ரூ. 52.02 லட்சம் மதிப்பிலான வங்கி இருப்புகள், சுமார் ரூ. 4 கோடி மதிப்புள்ள 2.094 கிலோ தங்க ஆபரணங்கள், சுமார் ரூ. 45 லட்சம் மதிப்புள்ள மூன்று வாகனங்கள், ரூ. 30 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள், மற்றும் சுமார் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள 20 மது பாட்டில்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தனது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட நான்கு கட்டுமான நிறுவனங்கள் மூலம், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் கணிசமான முதலீடுகளைச் செய்திருந்ததையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அஞ்சநேய நகர் மற்றும் மூசாபேட் ஆகிய பகுதிகளில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டில், தற்போது கட்டுமானத்தில் உள்ள 10 குடியிருப்பு வளாகங்களை அவர் கட்டி வருவதும் தெரிய வந்தது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு அதிகாரப்பூர்வ மதிப்பீட்டை விட கணிசமாக அதிகமாக இருப்பதாக இருக்கும் என்று ரியல் எஸ்டேட் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன் படி சொத்துகளின் மொத்த சந்தை மதிப்பு தோராயமாக ரூ.100-150 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு இது போன்று லஞ்சம் வாங்கியதாக ரமணா கைது செய்யப்பட்டார்.

`இங்கதான் இருப்பா' - சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொன்றுவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து தேடிய இளைஞர்

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வந்தாள். அவளது பெற்றோர் விவசாய வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், உடல் நிலை சரியில்லாமல் சிறுமி பள்ளிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதி... மேலும் பார்க்க

'எனக்கு ​ஐபோன், உனக்கு பைக்' தாத்தாவை கொன்று நகையை திருட காதலனுக்கு கொட்டேஷன் கொடுத்த 13 வயது பேத்தி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாற்றா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சிவன்குட்டி (65). அம்பலப்புழாவைச் சேர்ந்த சிவன்குட்டி, குடும்பத்துடன் கொல்லம் பரவூரில் வசித்து வந்தார். மகளின் கணவர் ப... மேலும் பார்க்க

மதுரை: பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியைக் காட்டி ரூ. 35 ஆயிரம் பறிப்பு; வைரல் வீடியோவின் பின்னணி

மதுரை - மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தி... மேலும் பார்க்க

திருச்சி: ரீல்ஸ் மோகம்; கோயில் சுவற்றின்மீது பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசிய இருவர் கைது!

திருச்சி, பாலக்கரை, காஜாபேட்டை மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. அந்த கோயில் சுவற்றில் இரவு நேரத்தில் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதை கோயிலின் சுவரில் மர்ம நபர்கள் வீசி உள்ளனர். இதனால், அந்த ... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை

கரூர் - கோவை சாலையில் உள்ள என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா. இவர், தனது பெற்றோரை சந்திப்பதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது, ... மேலும் பார்க்க