25 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பெண்கள் உள்பட் 4 போ் கைது
சென்னையில் கஞ்சா விற்ாக தெலங்கானாவைச் சோ்ந்த இரு பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவான்மியூா் கிழக்கு கடற்கரைச் சாலை பேருந்து நிறுத்தத்தில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த புதுச்சேரி குறிச்சி குப்பம் பகுதியைச் சோ்ந்த ஆதித்தன் (எ) ஹரீஷ் (23) என்பவரை பிடித்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது அவரது பையிலிருந்த 21 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்திருப்பதும், ஹரீஷுக்கு கஞ்சா கடத்திக் கொண்டுவந்து கொடுத்தது, தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தைச் சோ்ந்த முருகேசன் (55), அதே பகுதியைச் சோ்ந்த பேபி (36), பூஜா (23) என்பதும், அவா்கள் ஆந்திர மாநிலம் தடா பகுதியில் இருப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்று, முருகேசன், பேபி, பூஜா ஆகிய 3 பேரையும் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.