செய்திகள் :

29 Movie Review: திகட்ட திகட்ட எடுக்கப்படும் காதல் பாடங்கள் - படிக்க சுவாரஸ்யம் தருகிறதா?

post image

சேலத்திலிருந்து சென்னைக்குப் பணி நிமித்தமாக வருகிறார் சத்யா (விது). அவருக்குள் 'நான் யார்?', 'என்னுடைய அடையாளம் என்ன?' என்கிற கேள்விகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

அதற்கான விடையைத் தேடும் பயணத்தில் இருக்கிறார் அவர். அப்படியான சமயத்தில், அவருடைய அலுவலகத்தில் பணிபுரியும் சகப் பணியாளரான விஜி (ப்ரீத்தி அஸ்ரானி) உடன் காதல் மலர்கிறது. ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதே விஜியின் கனவு.

29 Review | 29 விமர்சனம்
29 Review | 29 விமர்சனம்

ஆனால், இவர்களுடைய காதலில் பரஸ்பரம் முட்டிக்கொள்ளும் மோதல்கள், விஜியின் கனவுக்குத் தடையாகிவிடும் சூழல் ஏற்படுகிறது. அதன்பிறகு அரங்கேறும் சிக்கல்கள் என்னென்ன, சத்யாவின் அடையாளம் பற்றிய கேள்விக்கு விடை கிடைத்ததா என்பதுதான் இயக்குநர் ரத்னகுமாரின் இந்த '29'.

தன்னைப் பற்றிய சுய கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் விது. துள்ளல், பயம், குழப்ப மனநிலை எனப் பலவகை எமோஷன்களைக் கேட்கும் வேடத்தைத் தாங்கிப் பிடித்தாலும், சிரமப்பட்டு நடிப்பது தெரியும் அளவுக்கு சில இடங்களில் செயற்கைத்தனம் எட்டிப் பார்க்கிறது. வலுசேர்க்கவேண்டிய 'மைண்ட் வாய்ஸ்' வசனங்களும் கைகொடுக்கவில்லை.

கனவைத் துரத்திக்கொண்டு ஓடும் சுறுசுறுப்பு, காதலினால் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் நெருக்கடிகள் போன்றவற்றை நடிப்பில் பக்குவமாகக் கொண்டு வந்திருக்கிறார் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி.

29 Review | 29 விமர்சனம்
29 Review | 29 விமர்சனம்

ஆனாலும் முதிர்ச்சியான வேடத்தில் எட்டிப் பார்க்கும் சில குழந்தைத்தனமான காட்சிகள் தமிழ் சினிமாவின் 'டெம்ப்ளேட் நாயகி'க்கான இலக்கணம்!

நண்பனாக, அவினாஷ் படத்தின் 'குலு குலு' மீட்டருக்கு ஆங்காங்கே தீனி போட்டிருக்கிறார். விஜியிடம், தன் வலி மிகுந்த நினைவுகளைப் புலம்பி அழும் இடத்தில், நடிகராகவும் ஸ்டெடியான பெயர் வாங்குகிறார்.

கறாரான எதிரியாக வரும் மாஸ்டர் மகேந்திரனுக்கு, முறைக்கும் டியூட்டி மட்டுமே! விஜியின் தாயாராக சிந்து ஷ்யாம், நாயகனின் தாயாராக ஆதிரா பாண்டிலட்சுமி ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்திருக்கிறார்கள்.

இரவுகளுக்கு 'டல்' அடித்திடாத வகையில் அமைத்த லைட்டிங் நுட்பம், வண்ணமயமான கலர்ஃபுல் பிரேம்கள் எனக் கவனம் ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்.

10 சாப்டர்களாகப் பிரித்துச் சொல்லப்பட்டிருக்கும் ஐடியாவுக்கு தம்ப்ஸ் அப் என்றாலும், அதில் படத்தொகுப்பாளர் ஆர்.எஸ். சதீஷ்குமார் தொய்வின்றி கதையைச் சொல்லியிருக்கலாம்.

நோக்கியா பட்டன் மொபைல்கள், ரீசார்ஜ் ஸ்கிராட்ச் கார்டு எனக் கலை இயக்குநர் சண்முக ராஜா, பீரியட் ராட்டினத்தில் ரவுண்டு கூட்டிப் போயிருக்கிறார்.

29 Review | 29 விமர்சனம்
29 Review | 29 விமர்சனம்

[ஆனாலும் பல இடங்களில் 'நவீன சென்னை'யின் வைப் எட்டிப் பார்க்கிறது. 'சீலே சீலே', 'பொல்லாத ஆசைகள்', 'பூ' என ஷான் ரோல்டன் இசையில் வந்திருக்கும் பாடல்கள் காதலை உருகி உருகிச் சொல்கின்றன.

காதல், பிரிவு உண்டாக்கும் சோகம், மனமாற்றம் எனக் கதை நகரும் பாதைக்குப் பின்னணி இசையில் பூ மேடைகளை அமைத்துத் தந்திருக்கிறார்.

நாயகன், தன்னைப் பற்றித் தனக்குள் ஓடும் கேள்விகளுக்கு விடை தேடும் ப29 Review | 29 விமர்சனம்யணமாக இந்தக் கதையைக் காதல், இயல்பான காமெடி மற்றும் சென்டிமென்ட் சேர்த்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.

சேலத்திலிருந்து சென்னைக்கு வரும் இளைஞன், நாயகியைப் பார்த்தவுடன் மலரும் காதல், பின்பு நடக்கும் காதல் - கெஞ்சல் - மிஞ்சல்கள் ஆட்டம் என ஒவ்வொரு சாப்டர்களாகப் புரட்டிக் கதையைத் தொடங்குகிறது படம். தொடக்கத்தில் வரும் சாப்டர்கள், காட்சிகளாகக் கோக்கப்பட்ட விதம், அதில் அமைந்திருக்கும் ஹைக்கூ வசனங்கள் புன்னகையுடன் ரசிக்க வைக்கின்றன.

ஆனால், அதற்குப் பிறகான சாப்டர்களின் காதல் கதைகளில் உயிரில்லை. நாயகன், நாயகிக்கு இடையே வரும் மோதல்களுக்குக் காரணம், நம்பிக்கையின்மையா, 'மிஸ்' செய்யும் உணர்வா, எதிர்காலம் குறித்த குழப்பங்களா எனத் தெளிவாகச் சொல்லாததால் இடையிலேயே பிரேக் அப் ஆகிறது திரைக்கதை.

29 Review | 29 விமர்சனம்
29 Review | 29 விமர்சனம்

இடையிடையே, காதல் பாடத்தின் 'தீசிஸ்' கற்றுத் தருவதாக இழுத்....துக் கவித்துவமாக ஒவ்வொன்றையும் விளக்கியிருக்கிறார்கள். அதீத காதல் கவிதை வசனங்களும், சாதாரண விஷயத்துக்குக்கூட உவமையைத் துணைக்கு அழைப்பதும் ஒரு கட்டத்திற்கு மேல் திகட்டவே செய்கின்றன.

இப்படியான முதல் பாதியின் சாப்டர்கள் பக்கங்கள் தீர்ந்து போக, இரண்டாம் பாதி கதைக்கு வேறொரு புத்தகத்தை எடுத்துப் புரட்டத் தொடங்குகிறார்கள். தான் யாரென்பதைக் கண்டடையும் பகுதிக்கு நகரும் நாயகனின் கதை, முதல் பாதியின் கதைக்குத் தொடர்பே இல்லாமல் நகர்கிறது.

முதல் பாதியிலிருந்து முற்றிலுமாக விலகி, இரண்டாம் பாதியில் மெசேஜ் சொல்லும் கதைக்கு நகர்ந்திருப்பது குழப்பமூட்டும் எபிசோடே! அதிலிருந்து எங்கெங்கோ கதையின் பக்கம் கூட்டிச் சென்றிருப்பது, வேறொரு படத்திற்கு வந்துவிட்டோமோ என்கிற சந்தேகத்தையும் கொடுக்கிறது.

களத்தில் தட்டுத் தடுமாறி வெவ்வேறு குழப்பங்களை உண்டாக்கும் இந்த '29', வெறுமனே 'ஜஸ்ட் பாஸ்' மட்டுமே பெறுகிறது.

`ஒருத்தரோட திறமையை வளர்த்து விடுவதில் உறுதுணையா இருப்பது பெருமை!' - சசிகுமாரின் 'வாவ்' லைன்அப்கள்

தமிழ் சினிமாவில் திறமை இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை கைதூக்கி விடும் ஹீரோக்களில் சசிகுமாருக்கு தனி இடம் உண்டு. 10க்கும் மேற்பட்ட இயக்குநர்களை அவர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். 'டூரிஸ்ட் ஃபேமிலி... மேலும் பார்க்க

"4 வயதிலேயே என் மகனுக்கு பாலியல் பாதுகாப்பு, கருத்தடை வரை சொல்லிகொடுத்தேன்" - நடிகர் மாதவன்

திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் மாதவன். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் திரைப்படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அவரது ... மேலும் பார்க்க

கருப்பு: "அரசியல் விஷயங்கள் பயங்கரமா டேக் ஓவர் பண்ணக் கூடாதுன்னு காத்திருக்கோம்!" - ஆர்.ஜே பாலாஜி

சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்திருக்க... மேலும் பார்க்க

வேகமெடுக்கும் படப்பிடிப்பு! விக்ரம் படத்தில் ரியா ஷிபுவா; இணைந்த நடிகர்கள்! 'சீயான் 63' பரபர அப்டேட்

மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் விக்ரமின் ரசிகர்கள். விக்ரமின் பிறந்த நாளில் வெளியான `சீயான் 63' படத்தின் ஃபர்ஸ்ட் ஃப்ளேம் வீடியோ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்ததோடு வீடியோவும் செம வைரலாகிவிட்டது.... மேலும் பார்க்க

RB Choudary: ஏற்றுமதி பிசினஸ் டு சினிமா; 35 இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமை - தெரியாத கதைகள்!

தமிழ்த் திரையுலகை மட்டுமல்லாமல் இந்தியத் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மரணம். 'நாட்டாமை', 'பூவே உனக்காக', 'ஜில்லா' உள்ளிட்ட 99 திரைப்படங்களை தமிழ், தெலுங்... மேலும் பார்க்க

'ஆளுநரின் இந்த செயல் அருவருப்பானது; விஜய்யை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும்!' - பிரகாஷ் ராஜ்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுகவில் இருந்து ... மேலும் பார்க்க