செய்திகள் :

40 வயதில் அசால்ட்டாக `பை சைக்கிள் கிக்’ அடித்த ரொனால்டோ; ஆர்பரித்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ

post image

சவூதி ப்ரோ லீக்கில் ரொனால்டோ அடித்த பை சைக்கிள் கிக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இணைந்து தனது கால்பந்து பயணத்தைத் தொடங்கிய ரொனால்டோ, ரியல் மேட்ரிட் போன்ற அணிகளில் விளையாடி தற்போது அல் நஸர் அணிக்காக விளையாடி வருகிறார்.

ரொனால்டோ
ரொனால்டோ

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் சவூதி ப்ரோ லீக்கில் நேற்று (நவ.23) அல் கலீஜ் அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ சுழன்று கடினமான பை சைக்கிள் கிக்கை சுலபமாக செய்து கோல் அடித்திருக்கிறார்.

மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் இதனைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி ஆர்பரித்திருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மிகவும் கடினமான இந்த கிக்கை, 40 வயதில் சுலபமாக செய்து கால்பந்தின் ஜாம்பவான் என்பதை ரொனால்டோ நிரூபித்திருக்கிறார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த போட்டியில் 39 மற்றும் 42 நிமிடங்களில் கோல் அடித்து அல் நசர் அணி 2-1 என முன்னிலை வகித்து இருந்தது.

தொடர்ந்து 77வது நிமிடத்தில் அந்த அணி மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது. இறுதியில் ரொனால்டோவின் அபார கோலால், அல் நசர் அணி 4-1 என வெற்றி பெற்று அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Ronaldo: ``மெஸ்ஸி என்னை விட சிறந்தவரா?'' - ரொனால்டோவின் பதில்

கால்பந்து உலகில் அணையாமல் எரியும் 'மெஸ்ஸியா, ரொனால்டோவா யார் உண்மையான GOAT?' விவாதத்துக்கு எண்ணெய் ஊற்றியிருக்கிறார் அல்-நசீர் அணியின் நட்சத்திரம் ரொனால்டோ. மெஸ்ஸி தன்னை விட சிறந்த வீரர் என்பதைத் தான்... மேலும் பார்க்க