செய்திகள் :

400 பேருக்கு மட்டும் அழைப்பு: சொந்த ஊரை தவிர்த்து பஹ்ரைனில் திருமணம் செய்துகொள்ளும் அஜித் பவார் மகன்

post image

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். அவரது மகன் ஜெய் பவாருக்கு வரும் 4ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரை திருமணம் நடைபெறுகிறது. ஜெய் பவார் ருதுஜா பாட்டீலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இத்திருமணம் அஜித் பவாரின் சொந்த ஊரான பாராமதியிலோ அல்லது புனேயிலோ அல்லது மும்பையிலோ நடைபெறவில்லை. வளைகுடாவில் உள்ள பஹ்ரைன் நாட்டில் இத்திருமணம் நடைபெறுகிறது. இத்திருமணத்திற்கு 400 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பாட்டீல் மற்றும் பவார் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல், கட்சியின் மாநில தலைவர் சுனில் தட்கரே ஆகியோருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறும் இத்திருமண விழாவில் முதல் நாளில் மருதாணி வைக்கும் சடங்கு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 5ம் தேதி மஞ்சள் வைக்கும் நிகழ்ச்சியும், 6ம் தேதி சங்கீத நிகழ்ச்சியும், 7ம் தேதி திருமணமும் நடைபெறுகிறது.

சுப்ரியாவுடன் ஜெய்பவார்

விழா பஹ்ரைனில் நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகள் இந்தியாவில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு பவார் குடும்பத்திலும் பிளவு ஏற்பட்டது. ஆனால் கடந்த 30ம் தேதி மும்பையில் நடந்த சரத்பவார் பேரன் யுகேந்திர பவார் திருமணத்தில் பவார் குடும்பம் மொத்தமும் கலந்து கொண்டது. இதில் அஜித் பவார், சுப்ரியா சுலே, சரத்பவார் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

இப்போது அஜித் பவார் மகன் திருமணம் நடைபெறுகிறது. இதில் சரத்பவார் பங்கேற்பாரா என்று தெரியவில்லை. ஆனால் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே இத்திருமணம் குறித்த தகவல்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனால் இரு குடும்பமும் சமாதானமாகிவிட்டதாகவே தெரிவிகிறது. முன்னதாக ஜெய் பவார் தனது வருங்கால மனைவியுடன் சென்று சரத்பவாரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். மும்பையில் திருமணம் நடந்தால் அஜித் பவாரின் அரசியல் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். ஆனால் பஹ்ரைனில் திருமணம் நடப்பதால் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் திருமணம்

மறைந்த அஇஅதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த ரவிராஜின் மகள் திருமணம் ஒரத்தநாடு அருகே நேற்று நடந்தது.மறைந்த ஜெ ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் அவரிடம் உதவியா... மேலும் பார்க்க

"அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்!" - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புறநகர் மற்றும் நகரப் பகுதிகளுக்கு செல்ல ஏழு புதிய பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற... மேலும் பார்க்க

புதிய மேயர் யார்? - மும்பை உட்பட மகா., முழுவதுமுள்ள 29 மாநகராட்சிளுக்கு வரும் ஜன.,15ம் தேதி தேர்தல்

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளின் பதவிக்காலம் கடந்த 2022ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை... மேலும் பார்க்க