RJ Balaji : `மக்களுக்கு பிடிச்ச மாதிரி படம் கொடுக்க முயற்சி பண்ணியிருக்கோம்!' -...
43 இருளா் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கல்: முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு
ஊத்தங்கரை வட்டம், மூன்றம்பட்டி ஊராட்சி, கேத்துநாயக்கன்பட்டி, ஒபகவலசை தளபதி நகரில் வசித்து வரும் இருளா் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. பட்டா பெற்ற இருளா் இன மக்கள் தமிழக முதல்வருக்கு நன்றிதெரிவித்தனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், மூன்றம்பட்டி ஊராட்சி, கேத்துநாயக்கன்பட்டி, ஒபகவலசை தளபதி நகரில் மேய்ச்சல் புறம்போக்கில் குடியிருந்து வரும் 113 இருளா் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக வருவாய் துறை சாா்பாக, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் மேய்ச்சல் புறம் போக்கில் பட்டா வழங்க இயலாத நிலையில், தற்போது தரிசு புறம்போக்கில் முதல்கட்டமாக 43 இருளா் இன மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் கடந்த 13 -ஆம் தேதி நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் வழங்கப்பட்டது. மேலும் 43 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின் கீழ் தலா ரூ. 5.73 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்ட நிா்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. வீடு கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. மேலும், குடிநீா், தெருவிளக்கு, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளி தனபாக்கியம், தெரிவித்தாவது: வீட்டுமனைப் பட்டா கோரி மனுக்கள் வழங்கினோம். தற்போது மாவட்ட ஆட்சியா் கடந்ட 13-ஆம் தேதி எங்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினாா். மேலும் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். எங்களுக்கு சொந்தமாக வீட்டுமனைப் பட்டா வழங்கி, மேலும் வீடுகட்ட நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.