செய்திகள் :

``5 வருடங்களில் வர வேண்டிய ஆட்சி மீதான வெறுப்பு 100 நாட்களிலே..." - மா.சுப்ரமணியன் காட்டம்

post image

முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பல்வேறு புகழஞ்சலி மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் இறுதி நிகழ்வாக சோழிங்கநல்லூர் தொகுதியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``எதிர்க்கட்சியாக இருக்கும்போது பொதுக்கூட்டம் நடத்துவது சவாலானது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வெறும் 100 நாட்களிலேயே மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த 100 நாள் ஆட்சியை மக்கள் சுறா படத்துடன் ஒப்பிட்டுச் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

5 வருஷத்தில் வர வேண்டிய ஆட்சி மீதான வெறுப்பு, வெறும் 100 நாட்களிலேயே மக்களுக்கு வந்துவிட்டது. இன்றைக்கு 100 நாள் ஆட்சியைக் கொண்டாடும் வேளையில், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மக்கள் கழிவுநீர் அடைப்பு பிரச்னைக்காக முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும், திருவொற்றியூரில் பிளஸ் 1 மாணவன் தனுஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆறுதல் கூறச் சென்ற இரண்டு அமைச்சர்களை பொதுமக்கள் துரத்தியடித்த சம்பவம் நடந்துள்ளது. இவை அனைத்துமே 100 நாள் ஆட்சியின் உண்மையான நிலைமையைக் காட்டுகிறது" என்றார்.

''முன்வரிசையில் நடிகை... வெட்கமே இல்லையா முதல்வரே?'' - முரசொலி நாளிதழ் கடும் தாக்கு

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜார்ஜ் கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றியிருந்தார். இதை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்று விமர்சித்து தலையங்கம் எழு... மேலும் பார்க்க

பாஜக-வுடன் உறவைப் புதுப்பித்த ஆர்எஸ்எஸ்; 6 ஆண்டுகளுக்குப் பிறகு ராம் மாதவிற்கு பாஜகவில் முக்கிய பதவி

பா.ஜ.கவின் புதிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்று 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படாமல் இருந்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவ... மேலும் பார்க்க

VCK: கட்டுக்கடங்காத கூட்டம், தவெக கூட்டணி உறுதி, திருமா பேச்சு - தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு Bytes

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக காலையில் இருந்தே தொண்டர்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். இன... மேலும் பார்க்க

'கேரளா அல்லா... இனி 'கேரளம்' ஆனு' - கேரளம் - பெயர் மாற்றத்திற்குக் காரணம் என்ன?

2024-ம் ஆண்டு ஜூன் மாதம், கேரள சட்டமன்றத்தில், அந்த மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்று மாற்றப்பட வேண்டும் என்கிற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், மத்திய அமைச்சரவை இதற்கு ... மேலும் பார்க்க

"டிரக்கிற்குள் ஒளியும் நிலைமை வராதபடி மொத உங்க பாதுகாப்பை உறுதியாக்குங்க" - ட்ரம்பைச் சீண்டும் ஈரான்

'ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறோம்' என்கிற பேச்சை முன்னெடுத்திருக்கிறது அமெரிக்கா. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிற... மேலும் பார்க்க

CJP பாணியில் ‘Dimagi Naxal Party’ - ஒரே நாளில் 1.6 லட்சம் பேர் ஃபாலோ; ஆனால் இப்போது? என்ன ஆனது DNP?

சமூக வலைதளங்களில் புதிதாக உருவான ஒரு Instagram பக்கம், தொடங்கிய ஒரே நாளில் 1.6 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை பெற்றது. அதைவிட ஆச்சரியம்... வேகமாக வைரலான அந்தப் பக்கம், அதே வேகத்தில் தற்போது காணாமல... மேலும் பார்க்க