செய்திகள் :

'5 ஆண்டுகளில் 29,000 காவலர் பணி உருவாக்கப்படும்!' - முதல்வர் விஜய் உறுதி!

post image

சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. காவல்துறையை முதல்வர் கையில் வைத்திருப்பதால், அந்தத் துறை சார்ந்த அறிவிப்புகளை முதல்வர் விஜய் இன்று அறிவித்திருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

காவல்துறை சார்ந்து முதல்வர் விஜய் வெளியிட்ட சில அறிவிப்புகள் இங்கே, '29,108 காவலர் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.

போதைப் பொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக ஒழிக்கும் கிராமம் ஒன்றுக்கு 10 லட்ச ரூபாய் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்.

212 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் காவல்துறை நவீன்மயமாக்கப்படும்.

லஞ்சம் லாவண்யத்தை ஒழிக்க காவல்நிலையங்களுக்கு ஒதுக்கப்படும் சில்லறை செலவினங்கள் நிதி உயர்த்தி வழங்கப்படும்.

பணிக்காலத்தில் இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை 30 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

CM Vijay
CM Vijay

பணியின் போது துணிச்சலாக பணியாற்றி உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு 1கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும்.

சேலம் மற்றும் விழுப்புரத்தில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் மரபணு சோதனை வசதி நிறுவப்படும். 200 கோடி ரூபாய் செலவில் காவல்துறையினருக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படும்.' என்றார்.

`பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மாணவிகள்; தீண்டாமை... உளவியல் ஒடுக்குமுறை!' - மாணிக்கம் தாகூர்

புதுக்கோட்டை அருகே ஓடும் அரசுப் பேருந்தின் கதவு திடீரென திறந்ததில், பேருந்தில் பயணம் செய்த 10 பள்ளி மாணவிகள் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க

மேகதாது: ``மேலும், மேலும் முன்னேறும் கர்நாடக அரசு... ஆனால், நாம்?" - அன்புமணி வலியுறுத்தல்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத்தை, கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சாலுவராய சாமி நேரில் சந்தித்து வலியுறுத... மேலும் பார்க்க

விதி 110: ``நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகம்" - சீமான் காட்டம்

கடந்த ஆகஸ்ட் 05- ம் தேதி முதல் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாள்தோறும் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களும், அத்துறை தொடர்பான அறிவிப்புகளும... மேலும் பார்க்க

TN Assembly : முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி; அவையில் அனல் பறந்த விவாதம் | Full Story

சட்டமன்றத்தில் முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் முதல்வர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காரசாரமாக கருத்துகளை பகிர்ந்து கொண்டன... மேலும் பார்க்க

ஈரான் பிரதமரைச் சந்தித்த மோடி: `ஈரானுக்கு உதவினால் பொருளாதார தடை' - அமெரிக்கா எச்சரிக்கை

சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடி கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பிஷ்கெக் நகருக்கு 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டிற்காகச் சென்றிருந்தார்.மோடி - ஈரான் பிரதமர் சந்திப்புஅங்கே ரஷ்ய அத... மேலும் பார்க்க

"விஜய் கன்னியாகுமரி போனாரே... ஒரு தொகுதியாச்சு ஜெயிச்சீங்களா?" - உதயநிதி vs ஆனந்த்

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கும் தவெக அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்திருந்தது.அமைச்சர் ஆனந்த்... மேலும் பார்க்க