செய்திகள் :

60 நாள்கள் தூக்கப் போட்டி... ரூ.9.6 லட்சம் பரிசு வென்ற மும்பை இளம்பெண்!

post image

தூங்குவதற்காகவே லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியுமா? ஆம்! இந்தியாவின் பிரபல மெத்தை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனமான Wakefit நடத்திய வித்தியாசமான 'Sleep Internship' போட்டியில் மும்பையைச் சேர்ந்த ஜினியா சட்டர்ஜி (Jiniya Chatterjee) ரூ.9.6 லட்சம் பரிசை வென்றுள்ளார். இதனுடன் நிறுவனத்தின் சார்பில் சுற்றுலா பேக்கேஜும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

Wakefit நிறுவனம் 2019-ம் ஆண்டு தொடங்கிய இந்த முயற்சியின் ஐந்தாவது சீசனில், நாடு முழுவதிலுமிருந்து இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். பல்வேறு கட்டத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களுக்குப் பிறகு 10 பேர் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

சுமார் 60 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், தினமும் ஒன்பது மணி நேரம் தூங்குவது முக்கிய இலக்காக இருந்தது. பங்கேற்பாளர்களுக்கு மெத்தை மற்றும் தூக்கத்தைக் கண்காணிக்கும் கருவி வழங்கப்பட்டது. அவர்கள் தூங்கும் நேரம், தூக்கத்தின் தரம் மற்றும் தினசரி செயல்திறன் ஆகியவை கண்காணிக்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

ஆனால், போட்டி வெறும் தூக்கத்துடன் முடிந்துவிடவில்லை. வாரந்தோறும் சுவாரஸ்யமான சவால்களும் நடத்தப்பட்டன. திரைப்படக் காட்சிகளைத் தூக்கம் சார்ந்த நகைச்சுவையுடன் மீண்டும் நடிப்பது, தங்களது தூக்கப் பழக்கங்களைப் பதிவு செய்வது, உரையாடலின்போது 'Pillow' அல்லது 'Blanket' என்ற வார்த்தைகளை மற்றவர்களுக்குத் தெரியாமல் பத்து முறை பயன்படுத்துவது எனப் பல வித்தியாசமான சவால்கள் இடம்பெற்றன.

இறுதிச் சுற்றில் நான்கு போட்டியாளர்கள் பங்கேற்றனர். படுக்கையறையை நினைவிலிருந்து மீண்டும் அமைக்கும் சவால், தங்களுக்குத் தேவையான தலையணை, போர்வை, விளக்கு உள்ளிட்டவற்றை ஏலம் எடுக்கும் சவால் எனப் பல கட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியில் தூக்க மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் அடிப்படையில் ஜினியா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

தூக்கத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த முயற்சி, ஒரு சாதாரணமான அன்றாடச் செயலையும் வித்தியாசமான போட்டியாக மாற்றியிருக்கிறது!

சேலம்: 20 கிலோ உலர் பழங்கள் கொண்டு 200 கிலோவில் தயாராகும் கிறிஸ்துமஸ் பிளம் கேக்! | Album

சேலத்தில் பிரம்மாண்டமான கேக் தயாரிப்பு பணி நடைபெற்றதுசேலத்தில் பிரம்மாண்டமான கேக் தயாரிப்பு பணி நடைபெற்றதுசேலத்தில் பிரம்மாண்டமான கேக் தயாரிப்பு பணி நடைபெற்றதுசேலத்தில் பிரம்மாண்டமான கேக் தயாரிப்பு பண... மேலும் பார்க்க

பருத்திப்பால், கருப்பு கவுனி, இளநீர் அல்வா.. திருநெல்வேலியில் மணக்கும் விதவிதமான அல்வாக்கள்! | Album

தீபாவளி:பருத்திபால்,கருப்பு கவுனி, இளநீர் அல்வா என திருநெல்வேலியில் மணக்கும் விதவிதமான அல்வாக்கள்.! மேலும் பார்க்க

கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?- இந்த கோர்ஸைப் பத்தியும் தெரிஞ்சுக்கோங்க பாஸ்; கோவாவில் புது முயற்சி!

ஒரு நல்ல வேலையைப் பெறுவதற்கு ஆண்டுக்கணக்கில் படிக்கிறோம். விரும்பிய துறையில் சாதிக்கப் பல பயிற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனால், வாழ்நாள் முழுவதும் ஒருவருடன் இணைந்து பயணிக்கப் போகும் திருமண வாழ்க்கைக்காக எ... மேலும் பார்க்க

ஆயுஷ்மான் குரானாவிற்கு குறி? - பிஷ்னோய் கேங்க் பெயரில் பாலிவுட் நடிகர்களுக்கு தொடரும் மிரட்டல்!

பாலிவுட் பிரபலங்களுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நடிகர் டைகர் ஷெராப் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் மும்பையில் துப்பாக்கிச்ச... மேலும் பார்க்க

`இதற்கெல்லாம் மதச்சாயம் பூசாதீர்கள்'- நடிகையின் விழிப்புணர்வு வீடியோ நீக்கப்பட்டதற்கு கோர்ட் கண்டனம்

மும்பையில் பாலிவுட் நடிகைகள் தியா மிர்ஷா, மாதுரி தீட்ஷித், கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ஆகியோர் பட்டாசுகளை சாலையில் வெடிக்க வேண்டாம் என்று தெரிவிக்கும் விழிப்புணர்வு வீடியோவை, மும்பை மாநகராட்சி சமூக வலை... மேலும் பார்க்க