செய்திகள் :

8 வயது மகளை 29-வது மாடியிலிருந்து வீசிவிட்டு, விபரீத முடிவெடுத்த தாய்.... மும்பையில் பயங்கரம்!

post image

மும்பை அருகில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் தனது கணவரோடு வசித்து வந்தவர் மைதிலி (35). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள். இவர்கள் 29வது மாடியில் வசித்து வந்தனர். மைதிலியின் கணவர் ஆசிஷ் கான்டிராக்டராக இருக்கிறார். மைதிலி சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இதற்காக மருந்து எடுத்து வந்தார். சமீபத்தில் மருந்து காலியாகிவிட்டது. அதன் பிறகு மருந்து வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தபோது அதனை மைதிலி சரியாக சாப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மைதிலியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இது குறித்து பக்கத்து வீட்டில் சொன்னால் பிரச்னையாகிவிடும் என்று கருதி ஆசிஷ் யாரிடமும் சொல்லாமல் இருந்தார். இன்று காலையில் ஆசிஷ் வீட்டில் இருந்தபோது திடீரென மைதிலி தனது கணவரை படுக்கையில் அறையில் இருந்து வெளியில் தள்ளி பூட்டிக்கொண்டார்.

உள்ளே மைதிலியும், அவரின் மகளும் இருந்தது. மைதிலியின் மகள் உதவி கேட்டு சத்தம் போட்டு கத்தினார். ஆசிஷ் வெளியில் இருந்து கதவை திறக்கும்படி கூறி கதவை தட்டினார். ஆனால் ஒரு கட்டத்தில் படுக்கை அறைக்குள் இருந்து சத்தம் வருவது நின்றுவிட்டது. இதனால் சந்தேகமடைந்து கீழே பார்த்தபோது மக்கள் கூட்டமாக இருந்தனர். கீழே சென்று பார்த்தபோது தாயும், மகளும் கீழே விழுந்து இறந்து கிடந்தனர். மைதிலி தனது மகளை கீழே தூக்கிப்போட்டுவிட்டு தானும் கீழே குதித்திருந்தார். வீட்டில் ஜன்னல் கதவு திறந்திருந்தது. இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மைதிலியும், ஆசிஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மைதிலி மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். ஆனால் ஆசிஷ் பஞ்சாப்பைச் சேர்ந்தவர் ஆவார். இம்மரணம் குறித்து மைதிலியின் உறவினர்கள் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.

`ரூ.1 லட்சம் கொடுத்தால்தான் எஃப்.ஐ.ஆர்!’ - லஞ்சம் கேட்ட போலீஸ்... கட்டம் கட்டிய புதுச்சேரி டிஜிபி

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியை அடுத்திருக்கும் கடப்பேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சரண்ராஜ். இவர் தன்னுடைய நண்பர்களான குணசேகரன் மற்றும் செந்திலுடன் பிப்ரவரி 12-ம் தேதி புதுச்சேரி துத்திப... மேலும் பார்க்க

Digital Arrest: ``சிக்கினது நான் இல்லடா... நீ" - ஊடகவியலாளரிடம் ஏமாந்த சைபர் கொள்ளையன்!

சமீப காலமாக டிஜிட்டல் கைது, சைபர் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறை அதிகாரியையே டிஜிட்டல் கைது செய்ய முயன்ற சம்பவங்கள் எல்லாம் இந்தியாவில் நடந்திருக்கிறது. அப்படி ஒரு முயற்சி ஊடகவியலாளர... மேலும் பார்க்க

Hair loss: `வழுக்கையில் முடிமுளைக்கும் எண்ணெய்' - 65 பேரின் பார்வையில் சிக்கல்! - என்ன நடந்தது?

எப்போதும் உடலின் பாகங்களில் தலைமுடிமீது மக்களின் கவனம் கூடுதலாக இருக்கும். பொடுகில் தொடங்கி நரைமுடி வரை அனைத்தையும் சரிசெய்ய வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றனர். தற்போதைய நுகர்வு கலாசா... மேலும் பார்க்க

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் கைதான ஞானசேகரன் மீது புதிய வழக்கு! - விவரம் என்ன?

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், தன்னுடைய ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், ஆண் நண்பரை விரட்டிவிட்டு மாணவிக்கு சொல்ல முடியாத பாலியல் தொல்லைக் கொடுத்தார். ... மேலும் பார்க்க

சென்னை: கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.12 லட்சம் மோசடி - முதியவர் சிக்கியது எப்படி?

சென்னை வில்லிவாக்கம், பாரதி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (51). இவர் வில்லிவாக்கம் சிட்கோ நகர், 1-வது மெயின் ரோட்டில் தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 17.3.2025-ம் தேதி இவரின் அடகு கடைக்கு பாஸ... மேலும் பார்க்க

திருச்சி: சிறுமியை சிறார் வதை வழக்கு; குற்றம்சாட்டப்பட்ட நபர் தற்கொலை - நடந்தது என்ன?

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருமகவுண்டம்பட்டியைச் சேர்ந்த புரக்கிலா என்பவரது மகன் சேகா். இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளாா். இந்நிலையில் இவா் அதே பகுதியைச் சோ்ந்த 15 வய... மேலும் பார்க்க