செய்திகள் :

Accident: `திருப்பத்தூர் பேருந்து விபத்துக்கான காரணம் இதுதான்' - நடத்துனர் கொடுத்த தகவல்

post image

காரைக்குடி–திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப் பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் மதுரை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநர் சென்ராயன் உயிரிழந்துள்ளார்.

திருப்பத்தூர் விபத்து
திருப்பத்தூர் விபத்து

மற்றொரு பேருந்தின் ஓட்டுநர் சுதாகர், நடத்துனர் கலைச்செல்வன் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், விபத்து நடந்த பேருந்தில் இருந்த நடத்துனர் இது குறித்து பேசுகையில்,

"நாங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருந்தோம். எதிர்திசையில் வந்த பேருந்து வேகமாக வருவதைப் பார்த்ததும், சாலையிலிருந்து ஓரம் இறங்கி ஓட்டிக்கொண்டிருந்தோம். அதையும் மீறி அந்தப் பேருந்து ஏறிவந்து நேருக்கு நேர் மோதிவிட்டது. இந்த விபத்தில் என் ஒரு கையின் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. எங்கள் பேருந்தின் ஓட்டுநர் ஸ்டீயரிங்கில் சிக்கியதால் உயிரிழந்துவிட்டார்," என்று தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் பேருந்து விபத்து: 11 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப்பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் ம... மேலும் பார்க்க

கும்பகோணம்: தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து இளம் பெண் பலி; பெற்றோர் உட்பட மூவர் காயம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆலமன்குறிச்சி உடையார் தெருவைச் சேர்ந்தவர் முத்துவேல்(56). கூலி தொழிலாளர். இவரது மனைவி சீதா (45). இவர்களின் மகள்கள் கனிமொழி (21) பி.பி.ஏ., பட்டதாரி. ரேணுகா (2... மேலும் பார்க்க

கூடலூர்: 4 மாத தேடல்; 40-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி; வனத்துறை கூண்டுக்குள் சிக்கிய ஆண் புலி

உலக அளவில் வங்கப் புலிகள் அதிக எண்ணிக்கையில் வாழும் வனப்பகுதிகளில் நீலகிரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. காடு போதாமை, நீர்நிலை ஆக்கிரமிப்பு, தனியார் பெருந்தோட்ட நிறுவனங்களின் இடையூறு உள்ளிட்ட பல்... மேலும் பார்க்க

முதுமலை: 20 அடியில் கூண்டு, 24 மணிநேரமும் சுழலும் கேமரா - புலி தாக்கிய‌ சம்பவத்தால் வனத்துறை உஷார்

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டலமான மாவனல்லா பகுதியில் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பழங்குடி பெண் நாகியம்மாளை கடந்த 24 - ம் தேதி மதியம் புலி தாக்கியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த... மேலும் பார்க்க

தர்மபுரி: பைக் மீது வாகனம் மோதி 2 இளைஞர்கள் பலி; ஆணவப் படுகொலையா? - போலீசார் விசாரணை

தர்மபுரி மாவட்டம் சொன்னம்பட்டியைச் சேர்ந்த சுனீல்குமார், கெலமங்கலம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் முருகன், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார... மேலும் பார்க்க

Sky Dining: கிரேனில் 150 அடி உயரத்தில் சாப்பாட்டு மேசையுடன் தொங்கிய குடும்பம்; போராடி மீட்பு!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. மூணாறை அடுத்த ஆனச்சல் பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்று 'ஸ்கை டைனிங்' என்ற பெயரில் வித்தியாசமான சாப்பாடு முறையை செயல்படுத்தி வருகிறது. ... மேலும் பார்க்க