செய்திகள் :

Aishwarya Lekshmi: "பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாசாரம் இருக்கிறதா?" - ஐஸ்வர்யா லட்சுமி

post image

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அவருடைய ஆடை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வைர நகைக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அவர் அணிந்திருந்த ஆடை குறித்துச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சிலர் விமர்சனங்களைப் பரப்பி வந்தனர்.

இந்தச் சர்ச்சை குறித்து மலையாளத்தில் ரஞ்சினி ஹரிதாஸுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

Aishwarya Lekshmi | ஐஸ்வர்யா லட்சுமி
Aishwarya Lekshmi | ஐஸ்வர்யா லட்சுமி

அவர் பேசுகையில், "அந்த நிகழ்வில் புகைப்படக் கலைஞர்கள் எனது முகத்தில் கவனம் செலுத்தாமல், தவறான கோணங்களில் புகைப்படங்கள் எடுப்பதிலேயே கவனம் செலுத்தினர்.

இதனால் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. ஒருவர் சங்கடப்படும்போது அவர்களின் உடலமைப்பின் அசைவு இயல்பாகவே மாறிவிடும்.

எனது தனிப்பட்ட எல்லை மீறப்பட்டதாகவே நான் உணர்ந்தேன். நான் அணிந்திருந்த ஆடையால் எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை, ஆனால் அங்கு இருந்தவர்களின் தவறான செயல்களால்தான் நான் சங்கடப்பட்டேன் என்பதை இணையத்தில் விமர்சித்தவர்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர்.

'சங்கடமாக இருந்தால் ஏன் அப்படி ஒரு ஆடையை அணிய வேண்டும்?' என்று பலர் என்னைக் கேள்வி கேட்டிருந்தனர். ஒரு பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாசாரம் இருக்கிறதா? நம்முடைய நடத்தையில் கலாசாரம் இல்லையா?

ஐஸ்வர்யா லட்சுமி | Aishwarya Lekshmi
ஐஸ்வர்யா லட்சுமி | Aishwarya Lekshmi

பெண்களைப் பற்றித் தவறான கருத்துகளைப் பேசுபவர்களைக் கண்டிக்க இங்கு யாருமில்லை. ஆனால், பெண்கள் மட்டும் தங்கள் ஆடையிலும் தோற்றத்திலும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆரம்பத்தில், இந்த விமர்சனங்களை நான் சிரித்துக் கடந்துவிட்டேன். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல இது பெரிய விவாதமாக மாறியது எனக்கு அதிர்ச்சியளித்தது.

நாட்டின் ஜிடிபி வளர்ச்சியைப் பற்றியோ, முதியோர் இல்லங்களில் கைவிடப்படும் பெற்றோரைப் பற்றியோ பேசுவதற்கு இங்கு யாருக்கும் நேரமில்லை. ஆனால், ஒரு பெண்ணின் ஆடையைப் பற்றிப் பேசுவதற்கு மட்டும் அனைவருக்கும் நேரம் இருக்கிறது" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Sherif: "இன்னொருத்தருடைய உழைப்புல அவங்க பெயரை போட்டுக்கிறாங்க!" - நடன இயக்குநர் ஷெரிஃப்

'கனிமா', 'பவள மல்லி' உள்ளிட்ட பல பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தவர் நடன இயக்குநர் ஷெரிஃப். அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவர் சமீபத்தில் பதிவிட்ட காணொளி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தக் காணொள... மேலும் பார்க்க

Mandaadi: "தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே பெருவெற்றி!" - 'மண்டாடி'க்கு சீமான் பாராட்டு!

சூரியின் 'மண்டாடி' படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மகிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் ஆக... மேலும் பார்க்க

Venkat Prabhu: "இதுனாலதான் நான் லண்டனுக்கு போகல!"- 'லெனின் பாண்டியன்' பட நிகழ்வில் வெங்கட் பிரபு

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரி... மேலும் பார்க்க

Ilaiyaraaja: "இவன் என்கிட்டயே நடிப்பான்" - 'கங்கை அமரன்' பற்றி இளையராஜா கலகல

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தர்ஷன் கணேசன், மறைந்த ந... மேலும் பார்க்க

Dorothy: 'தும்சக்கு தும்சக்கு தும்சக்கு!' - டொராண்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி' படக்குழு| Photo Album

சாலமன் பாப்பையா: "அனாதை பிள்ளைகளாக நாங்கள் நிற்கிறோம்"- மனமுடைந்து அழுத பாரதி பாஸ்கர் மேலும் பார்க்க

DC Exclusive: "லோகேஷை நடிக்க வச்சதுக்கு காரணம் இதுதான்!" - அருண் மாதேஸ்வரன் பேட்டி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான 'டிசி' படத்திற்கு வசூலாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்கு படம் வந்திருக்கிறத... மேலும் பார்க்க