செய்திகள் :

Ajinkya Rahane: "கேப் எண் 278 விடைபெறுகிறது!"- ஓய்வை அறிவித்த ரஹானே

post image

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், டெஸ்ட் அணியின் தூணாக விளங்கியவருமான அஜின்கியா ரஹானே அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

ரஹானே
ரஹானே

இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டிகள், 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் ரஹானே "கேப் எண் 278 விடைபெறுகிறது. நீங்கள் கொடுத்த அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. என்றென்றும் நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஓய்வை அறிவித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 17 வருட தனது கிரிக்கெட் வாழ்க்கையில், இந்தியாவின் டெஸ்ட் அணியில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்ததில் ரஹானே முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

ரஹானே
ரஹானே

குறிப்பாக, விராட் கோலி இல்லாத நேரத்தில் இந்திய டெஸ்ட் அணிக்குத் தலைமை தாங்கி, ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர்-கவாஸ்கர் கோப்பையை (2020-21) வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.!

Rahane: '278... Signing Off' - வெளிநாட்டு மைதானங்களின் மிடில் ஆர்டர் காவலன் ரஹானே!

"Cap No.278... Signing Off" சமூக வலைத்தளத்தில் இந்த ஒற்றை வரியைப் பதிவிட்டு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜின்கியா ரஹானே, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்துள்ளார். இந்தி... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``ஒருபோதும் குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்காதே.." - சச்சின் டெண்டுல்கர்

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க

Rohit Sharma: 'நான் ஓய்வுபெறுகிறேனா?' - ரோஹித் சர்மா அளித்த விளக்கம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இங்கிலாந்... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியுடன் ரோஹித் ஓய்வு பெறுகிறாரா?- விளக்கம் அளித்த பிசிசிஐ செயலாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியானது.இந்தத் தகவல்கள் அதிர்ச... மேலும் பார்க்க

`இது சரித்திரத் தருணம்!' - லார்ட்ஸில் பேட்டிங், பவுலிங் என சகலத்திலும் மிரட்டிய ஹர்மன்பிரீத் படை!

லண்டனின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சரித்திர வெற்றி படைத்திருக்கிறது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மக... மேலும் பார்க்க

CSK: 18 ஆண்டுகாலப் பயணம்; 5 முறை கோப்பை வென்ற பயிற்சியாளர் - சிஎஸ்கேவில் இருந்து விலகிய ஃப்ளெமிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர், 200... மேலும் பார்க்க