`எடப்பாடி பழனிசாமிக்கு அட்வைஸ்; விஜய் மீது மறைமுக விமர்சனம்' - உதயநிதி ஸ்பீச் ஹை...
Ajith: `அஜித்தை வைத்து ரேஸிங் படமா?' - மலேசியாவில் சிறுத்தை சிவா சொன்ன பதில்!
நடிகர் அஜித் குமார் தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிற ஆசியா அளவிலான கார் பந்தயமான ஏசியன் லீ மேன் சீரிஸில் அவரது அஜித்குமார் ரேஸிங் அணியும் இந்தியாவின் தலைசிறந்த கார் ரேஸரான நரைன் கார்த்திகேயனுடன் இணைந்து கலந்து கொண்டு வருகிறார்.
இதில் நரைன் கார்த்திகேயன், அஜித் குமார் மற்றும் ஜூலின் கெர்பி ஒரு காரிலும், ஆதித்யா பட்டேல் மற்றும் ரோமன் வாஸ்நைக் மற்றொரு காரிலும் டிரைவர்களாக பங்கு பெற்று வருகிறார்கள். இந்த கார் பந்தயம் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த கார் பந்தையத்திற்கிடையே அஜித் தனது காதல் மனைவி ஷாலினியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். பேசி முடித்துவிட்டு மீண்டும் தனது அணியை நோக்கி திரும்பும் போது ஷாலினிக்கு கன்னத்திலேயே ஒரு முத்தம் கொடுத்துச் செல்லும் வீடியோ சமுகவலைதளங்களில் வரைலாகி வருகிறது
இந்த கார் பந்தையத்துக்கு நேரில் சென்று செய்தி சேகரித்து வருகிறது மோட்டர் விகடன் டீம். அப்போது மோட்டார் விகடன் துளசிதரனிடம் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், "அஜித் சாரின் அடுத்த படம் முந்தைய படமான குட் பேட் அக்லி படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் இருந்து முற்றிலும் நேர் எதிரானது. அஜித் சாரின் கதாபாத்திரமும். படத்தின் திரைக்கதையும் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பை வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளோம்" என்று அப்டேட் கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து கார் பந்தயத்தைத் தனது டீமுடன் வந்து கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருந்த இயக்குநர் சிறுத்தை சிவாவிடம் மோட்டர் விகடன் துளசிதரன், 'அஜித்தை வைத்து கார் பந்தயத்தை மையமாகக் கொண்ட படம் எடுக்கப்போகிறீர்களா?' என்று கேட்ட போது "காத்திருங்கள் அப்டேட் வரும்" என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா.
















