அதிமுக: "இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன்" - செல்லூர் ராஜு சாடல...
Arasan: ``இன்னும் 3 நாள்ல மதுரைல ஷூட்டிங்!" - மாஸ் லுக்கில் சிலம்ப(அ)ரசன் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்
சிலம்பரசனின் அடுத்த படமாக, கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் `அரசன்' படம் உருவாகிறது.
கடந்த அக்டோபரில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளன்று அரசன் பட ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.




சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிப்பதாக கடந்த மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், இன்னும் 3 நாளில் அரசன் பட ஷூட்டிங்கில் இணையப்போவதாக சிலம்பரசன் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
மலேசியாவில் தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டபோது சிலம்பரசன் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
#Arasan shooting begins from Dec 9th in Madurai.. I'm going to the shoot directly from here..✌️ As always, I'm counting on receiving all your love and support.. Thankyou..❣️
— Laxmi Kanth (@iammoviebuff007) December 6, 2025
- #SilambarasanTR in Malaysia..pic.twitter.com/xNJqVd4p1Y
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் சிலம்பரசன், ``மதுரைல 9-ம் தேதியில இருந்து அரசன் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது. நேரா இங்க இருந்து ஊருக்கு ஷூட்டிங் போறேன். உங்க எல்லோரோட அன்பும் ஆதரவும் எப்பவும் இருக்கும்னு நம்புறேன்" என்று ரசிகர்கள் மத்தியில் கூறினார்.
அந்த வீடியோவில் வரும் சிலம்பரசனின் லுக் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.














