'25 நாள்கள் முன்பு சிலிண்டர் புக் செய்தவர்களுக்கே முன்னுரிமை!' நெருக்குகிறதா தட்...
'ஈரான் ஏதாவது செய்தால்.! இது சீனாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் 'கிஃப்ட்'' - மிரட்டும் ட்ரம்ப்
ஹார்மோஸ் ஜலசந்தி - இதன் வழியாகத் தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் வணிகத்திற்குச் செல்கின்றன... உலகத் தேவையில் 20 சதவிகித எல்.என்.ஜி (LNG) செல்கின்றன.
ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போரினால் ஈரான் அந்த ஜலசந்தியை மூடி வைத்துள்ளது. இதனால் எண்ணெய் போக்குவரத்து பாதித்து, அந்த வர்த்தகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்...
"ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய்களை நிறுத்த ஈரான் ஏதாவது செய்தால், இது வரை தாக்கியதை விட, 20 மடங்கு அதிகமாக ஈரானை அமெரிக்கா தாக்கும்.
கூடவே, ஈரான் ஒரு தேசமாக மீண்டும் கட்டி எழுப்ப முடியாத அளவுக்கு அதன் இலக்குகளை அமெரிக்கா அழிக்கும்.
இறப்புகள், தீ, கோபம் மீண்டும் அவர்கள் மீது பொழியும். ஆனால், அது மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன்... நடக்கக்கூடாது என்று வேண்டுகிறேன்.
ஹார்மோஸ் ஜலசந்தியை அதிகம் பயன்படுத்தும் சீனா மற்றும் பிற நாடுகளுக்கு, இது அமெரிக்காவின் பரிசு" என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.














