செய்திகள் :

ட்ரம்ப்-க்கு பயப்படும் 'அந்த' காரணம்; தெரிந்தால் மோடி ராஜினாமா? - சுப்ரமணியன் சுவாமி

post image

இதுவரை எதிர்க்கட்சிகள் தான், `அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்ன சொல்கிறாரோ, அதைத் தான் இந்திய பிரதமர் மோடி செய்து வருகிறார்' என்று குற்றம்சாட்டி வந்தனர்.

ஆனால், இப்போது உள்கட்சியில் இருந்தே இந்தக் குரல் வந்துள்ளது. அதுவும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் குரல்.

பாஜகவிற்குள் இருந்துகொண்டே அந்தக் கட்சிக்கு எதிராகக் குரல் கொடுப்பது சுப்ரமணியன் சுவாமிக்குப் புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்
அப்படி ட்ரம்பை வைத்து மோடி குறித்து சுப்ரமணியன் சுவாமி என்ன கூறியுள்ளார்?

"இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு ஏன் இப்படிப் பயப்படுகிறார்?

மோடி எதனால், யாரால் இப்படி இருக்கிறார் என்பதை என்னிடம் எனக்குத் தெரிந்த அமெரிக்கர்கள் கூறினார்கள். ஆனால், அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது.

அது வெளியே தெரிந்தால் மோடி தனது பிரதமர் பதவியைக் கூட ராஜினாமா செய்ய நேரிடலாம்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுப்ரமணியன் சுவாமி.

விஜய்: ஸ்வீட் பாக்ஸூடன் வந்த 50+ நிர்வாகிகள்; முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தயார்? - பனையூர் அப்டேட்

சட்டமன்றத் தேர்தலுக்கான தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று அறிவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து விஜய் தேர்வு செய்திருக்கும் முக்கியமான 50 க்கும் மேற்பட்ட வேட்பா... மேலும் பார்க்க

'ஈரான் ஏதாவது செய்தால்.! இது சீனாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் 'கிஃப்ட்'' - மிரட்டும் ட்ரம்ப்

ஹார்மோஸ் ஜலசந்தி - இதன் வழியாகத் தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் வணிகத்திற்குச் செல்கின்றன... உலகத் தேவையில் 20 சதவிகித எல்.என்.ஜி (LNG) செல்கின்றன. ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போரின... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: `CBI சம்மனுக்கு நான் நேரில் ஆஜராக போகிறேன்' - செந்தில் பாலாஜி

கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கான விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது சி.பி.ஐ. இந்த விசாரணையையொட்டி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்க... மேலும் பார்க்க

ஈரான் போர் எதிரொலி: சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்? எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழக அரசு புது உத்தரவு

11-வது நாளாக ஈரான் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் தொடர்ந்தால், இந்தியா மாதிரியான பெரியளவில் எரிசக்தி இறக்குமதி நாடுகளுக்குப் பெரும் பாதிப்பு. இன்னும் இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றாலும... மேலும் பார்க்க

`அதிமுக வேட்பாளர்களின் ப்ளஸ் மைனஸ் ஃபைல்; விஜய்யுடன் கூட்டணி பேச்சு' - சசிகலாவின் கணக்கு பலிக்குமா?

சசிகலா புதிய கட்சிக்கான கொடியை அறிவித்த பிறகு மாவட்டம் வாரியாக தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவதில் மும்முரமாக இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் தனது இல்லத்தில் ஆதரவாளர்களை சந்... மேலும் பார்க்க

கேரளம்: "மற்றொரு பெண்ணுடன் பார்க்கக் கூடாத நிலையில் கணவனைப் பார்த்தேன்" - அமைச்சர் மீது மனைவி புகார்

கேரள இடது ஜனநாயகக் கூட்டணி அரசில் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருப்பவர் கே.பி.கணேஷ் குமார். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர். அவரது தந்தை பாலகிருஷ்ணபிள்ளைத் தொடங்கிய கேரளா காங்கிரஸ்(பி) என்ற ... மேலும் பார்க்க