செய்திகள் :

Arya: "அப்படிச் செய்தால் படம் காலியாகிடும்!" - ஆர்யா ஓபன் டாக்

post image

ஆர்யா, கெளதம் கார்த்திக், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்திருக்கும் ஸ்பை த்ரில்லர் திரைப்படமான ‘மிஸ்டர் எக்ஸ்’ இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர் ஆர்யா, அவருடைய கரியரில் பல மல்டி ஸ்டாரர் படங்களைச் செய்திருக்கிறார்.

அப்படியான மல்டி ஸ்டாரர் படங்களைத் தேர்வு செய்வது பற்றி சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் ஆர்யா.

ஆர்யா பேசுகையில், “ராஜா ராணி திரைப்படத்தில் நான் டபுள் கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. ஒருவருடைய கேரக்டர் வலுவாக இருந்தால்தான், இன்னொரு கேரக்டர் மெருகேறும்.

‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில், டான்சிங் ரோஸ், வாத்தியார் என அனைவருடைய கதாபாத்திரமும் மிகவும் முக்கியம்.

அப்படி இல்லையென்றால், அது சாதாரணமான ஒரு ஹீரோ திரைப்படமாக மாறிவிடும். அந்தப் புரிதலும், இப்படியான கேரக்டர்களை ஏற்று நடிக்கத் தன்னம்பிக்கையும் வேண்டும்.

நமக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நாம் சிறப்பாக நடிக்க வேண்டும். ஒரு நடிகராக இப்படி நாம் செக்யூராக உணர வேண்டும்.

நடிகர் ஆர்யா
நடிகர் ஆர்யா

மல்டி ஸ்டாரர் திரைப்படங்களில் நடிக்கும்போது, அங்கு வலுவான போட்டியும் இருக்கும். அத்தனை நடிகர்கள் ஒரு காட்சியில் நடிக்கும்போது, நம்முடைய பெஸ்டை நாம் கொடுக்க வேண்டும் என நமக்குத் தோன்றும்.

பரஸ்பரம் பாராட்டுகளைப் பகிர்ந்துகொள்வோம். அப்போது, அந்தக் காட்சியும் நல்லபடியாக வரும்.

சில நேரங்களில் நம்மைவிட மற்றொரு நடிகருக்கு நல்ல காட்சி இருக்கிறதே என நினைத்து, காட்சிகளை மாற்றினால், படமே காலியாகிவிடும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

விக்ரம் பிறந்தநாளில் காத்திருக்கும் சப்ரைஸ்; ரெடியான புரோமோ வீடியோ - 'சீயான் 63' அப்டேட்!

அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார் 'சீயான்'விக்ரம். 'வீரதீர சூரன்' படத்திற்கு பின் அடுத்து அவர் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். ``சில நேரங்களில் மௌனம் என்பது ஒரு மிகப்பெரிய தயாரிப்புக்க... மேலும் பார்க்க

Jananayagan: "எடிட்டரை குற்றம் சொல்ல வேண்டாம்; குற்றவாளியை போலீஸ் நெருங்கிவிட்டது!" - ஃபெஃப்சி

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் படத்தின் ரிலீஸ் அப்போது தடைப்பட்... மேலும் பார்க்க

அமர்க்களம்: `அஜித் - ஷாலினியின் ஆழமான காதலுக்கு நான் சாட்சி' - Exclusive BTS பகிரும் இயக்குநர் சரண்

அஜித்தின் 25வது படமான 'அமர்க்களம்' இம்மாதம் 24ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி நடித்திருக்கும் இப்படத்தில்தான் அவர்களின் காதல் மலர்ந்தது. 'சொந்த குரலில் பாட...' என ஷாலினி சொந்த... மேலும் பார்க்க

Asha Bhosle: "அவரின் இசை இந்த பூமியில் மனிதர்கள் இருக்கும் வரை இருக்கும்" - ஷங்கர் மகாதேவன்

பிரபல பின்னணிப் பாடகியான ஆஷா போஸ்லே உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இவருக்கு 92 வயது. 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் இவருக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருக... மேலும் பார்க்க

Asha Bhosle: "அவர் என்னிடம் காட்டிய பாசமும் அன்பும்"- உருக்கமாக வீடியோ வெளியிட்ட இளையராஜா

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே நேற்று (ஏப்ரல். 12) உடல்நல பாதிப்பால் காலமாகியிருக்கிறார். அவருக்கு வயது 92. மறைந்த பாடகி லதா மங்கேங்கேஷ்கரின் சகோதரியான ஆஷா போஸ்லே 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000 ப... மேலும் பார்க்க